sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : நவ 21, 2012

Google News

PUBLISHED ON : நவ 21, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐஸ்பாக்ஸ் தர்பூசணி:



நாம் வழக்கமாக சாப்பிடும் தர்பூசனி 8 முதல் 12 கிலோ வரை எடை இருக்கும். அதன் சாகுபடி காலம் 90 நாட்கள். அதில் இனிப்புச் சுவை கொஞ்சம் குறைவு. வருடத்தில் நவம்பர் மாதத்தில் விதைப்பு ஆரம்பித்து, ஜனவரியில் சந்தைக்கு வரும். பழங்கள் ஜூன், ஜூலை வரை இருக்கும். ஐஸ்பாக்ஸ் ரகங்கள் வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு பழத்தின் எடை ரகத்தைப் பொறுத்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கும். அபரிமிதமான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இந்தப்பழம் வழக்கம்போல் தமிழகத்தைவிட கேரளாவில்தான் அதிகம் விற்பனை ஆகிறது. இதன் சாகுபடி காலம் 60 நாட்கள். பெரிய தர்பூசனி ரகங்களைவிட இவற்றிற்கு கவனிப்பும் பராமரிப்பும் அதிகம் தேவை. தாளவாடிப் பகுதியில் ஐஸ்பாக்ஸ் அதிகமானபோது துணிந்து சாகுபடி செய்ய ஆரம்பித்த சிலரில் மோகனும் ஒருவர். வருடத்திற்கு 2 முறைதான் பயிர் செய்கிறார். இதன் சாகுபடியில் விதையை நேரடியாக வயலில் விதைப்பதில்லை. நர்சரிகளில் 15-17 நாட்கள் நாற்றாக வளர்த்து, பிறகு நடவு செய்கிறார். தாளவாடி முழுக்கவே சொட்டுநீர்ப்பாசனம் மூலமாகத்தான் ஐஸ்பாக்ஸ் சாகுபடி நடைபெறுகிறது. மல்ச்சிங் ஷீட் போட்டுத்தான் தர்பூசனி சாகுபடி செய்கிறார். மகசூல் ஏக்கருக்கு சராசரியாக 20 டன். விலை ரூ.10. மேலும் விபரங்களுக்கு: மோகன், த/பெ.கிருஷ்ணசாமி, கவுரி குட்டைத் தோட்டம், தலமலை ரோடு, தாளவாடி, சக்தி தாலுகா, ஈரோடு. 94872 42591.

பகவா மாதுளை:



தமிழகத்தில் ரூ.100க்கும் குறையாமல் விற்பனையாகும் ஒரே பழம் மாதுளைதான். மகாராஷ்டிராவில் இருந்துதான் தமிழகத்திற்கு மாதுளை வந்துகொண்டுள்ளது. மாதுளையில் 2 ரகங்கள் பிரபலம். கணேஷ், பகவா. இதில் கணேஷ் நமது நாட்டு மாதுளையைப் போல் உள்ளே கடினமான விதையடன் முத்துக்கள் வெள்ளை நிறத்துடனும், 'பகவா' சுத்த சிவப்பு நிறத்தில் மெல்லிய விதையுடனும் இருக்கும். ருசி, நிறம் காரணமாக பகவா குறைந்தபட்சமாக ரூ.100ல் ஆரம்பித்து ரூ.150வரை விற்பனையாகிறது.

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பகவா மாதுளைக் கன்றுகளை மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவந்து பயிர் செய்துள்ளனர். சுமாராக 80-100 ஏக்கர் வரை இங்கு பயிராகியுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை பூ எடுக்கிறது. ஆவணி, சித்திரை. செடி நடவு செய்து 18 மாதங்களுக்குள் வரும் பூக்களை உருவி விட்டுவிடுகின்றனர். செடி காய்க்க விடுவதில்லை. 18 மாதங்களுக்குப் பிறகே காய்க்க விட வேண்டுமாம். மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு 3 டன் மகசூல் எடுக்கின்றனர். செடியின் வயது 5 வருடத்திற்கு மேல்தான் இந்த மகசூல். மேலும் விபரங்களுக்கு: தமிழரசு, த/பெ.சென்னியப்பன், வேப்பமரத்தூர், கொமராயலூர் அஞ்சல், பவானி, ஈரோடு. 99428 25432.

(தகவல்: இன்றைய வேளாண்மை, அக்டோபர், 2012)

மரக்கன்றுகள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:



குமார் ஹைடெக் நர்சரி, (தமிழக அரசு உரிமம் பெற்றது), 204, மேகிணறு பிரிவு, என்.சி. பாளையம் அஞ்சல், மேட்டுப் பாளையம் ரோடு, அன்னூர்-641 653. கோவை மாவட்டம். 94877 05596, 93449 25596. மலைவேம்பு ரூ.6.00; தேக்கு ரூ.5.00; குமிழ் ரூ.5.00; செஞ்சந்தனம் ரூ.10.00; சந்தனம் ரூ.15.00; வேங்கை ரூ.10.00; சவுக்கு ரூ.3.00; தைலம் ரூ.3.00; சில்வர் ஓக் ரூ.6.00; மூங்கில் ரூ.15.00; வாகை ரூ.6.00; பெருமரம் ரூ.10.00 மற்றும் ஈடா ரூ.10.00 ஆகிய நாற்றுக்கள் கிடைக்கும். பாலாஜி ஆர்டிக்கல்சர்ஸ் நர்சிரி கார்டன், எம்.எம்.நகர், காஞ்சிபுரம். 97910 77543, 90030 50778. மரக்கன்றுகள் வழங்குவதோடு மட்டுமல்லாது குழி எடுத்தல், கன்று நடுதல், டிரிப் இர்ரிகேஷன் போன்ற பணிகளையும் ஆட்களை கொண்டு சிறப்பாக செய்து தருகிறார்கள். பார்ம் ஹவுஸ் அமைப்பது, லேண்ட் ஸ்கேப்பிங் செய்வது போன்ற சேவைகளையும் வழங்கிவருகிறார்கள்.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us