PUBLISHED ON : ஜூன் 26, 2013

கறிவேப்பிலை சாகுபடிக்கு மானியம் உண்டு
மாவட்டங்களில் போதிய அள வுக்கு கறிவேப்பிலை சாகுபடி செய்யப்படவில்லை. கறிவேப் பிலை சாகுபடியை வேளாண்துறை ஊக்குவித்து வருகிறது. கறிவேப்பிலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலைத்துறையை அணுகி கறிவேப்பிலை செடிகளை மானியத்துடன் பெற்றுச் செல்லலாம். கறிவேப்பிலை அதிக வருமானம் தரும் பயிராகும். ஓர் ஆண்டு பயிர் செய்தால் பல ஆண்டுகள் வரை பராமரித்து அதிக வருமானம் பெறலாம். நோய், பனி ஆகியவை அதிகளவு தாக்காத பயிர் கறிவேப்பிலை. இதனைப் பயிரிட அதிக வேலை ஆட்கள் தேவை யில்லை. பராமரிப்பு செலவும் குறைவு.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் கறிவேப் பிலை சாகுபடிசெய்யும் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருவதாகத் தெரிகிறது.கோவிந்தம்பாளையம், நத்தக்கரை, விரகனூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற் பட்ட விவசாயிகள் கறிவேப்பிலை பயிரிட்டுள்ளனர். கறிவேப்பிலை மூலம் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கறிவேப்பிலை வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டுவந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படுகிறது. கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் அறிவைப்பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.
மணல்கலந்த செம்மண், வண்டல் மண் மற்றும் நல்ல வடிகால்வசதியுள்ள மண் தேவை. பெரிய செடியாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அதிக மகசூல் பெற 60செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பூமியிலிருந்து 30 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
அடியுரம் 1 அடி ஆழத்தில் சதுர குழி தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழு உரம் இடவேண்டும். நட்டவுடன் ஒரு முறையும் பின்னர் வாரம் ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழு உரத்தை இட்டு கொத்திவிட வேண்டும்.
விலை குறைவான சில கருவிகள் பற்றி காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங் குளத்தூர் அருகே செயல்பட்டு வரும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தின் வேளாண் தொழில்நுட்பப் பிரிவில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் சித்தார்த் தெரிவிக்கிறார்.
எலிப்பொறி: நெல், காய்கறி, பழத்தோட்டங் களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அவற்றைப் பிடிக்க பிரத்யேகமான கருவி உள்ளது. இக்கருவியின் உதவியோடு ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட எலிகளைப் பிடிக்க முடியும். இதனைத் தூக்கிச் செல்வதும் எளிது. பொறியின் இரண்டு பக்கமும் துவாரங்கள் இருக்கும். ஒரு துவாரத்தின் வழியாக எலிக்கான தீவனத்தை வைக்க வேண்டும். அதைச் சாப்பிட இன்னொரு துவாரத்தின் வழியாக பொறிக்குள் நுழையும் எலிகள் வெளிவர முடியாத அளவிற்கு மாட்டிக் கொள்ளும். வயலில் 4 மூலைகளிலும் இப்பொறிகளைத் தொடர்ச்சியாக வைத்தால் கணிசமான அளவில் எலிகளைப் பிடித்துவிடலாம்.
புதிதாக வாங்கிய பொறியை எந்தத் தீனியும் வைக்காமலேயே வயலில் நான்கு மூலைகளிலும் இரண்டு நாட்களுக்கு வைத்துவிட வேண்டும். மூன்றாம் நாள் அதில் கருவாடு, சுட்ட தேங்காய், வடை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டால் எலிகள் மாட்டத் தொடங்கும். இதை வீடுகள், கடைகளிலும் பயன்படுத்தலாம். (தொடர்புக்கு: சித்தார்த், 044-2745 2371, 94432 11602). எலிப்பொறி தவிர பெருநெல்லிக்காய் விதை நீக்கும் கருவி, தென்னைமரம் ஏறும் கருவி, நிலக்கடலை ஓடு நீக்கும் கருவி ஆகியவை பற்றிய தகவல்களையும் பெறலாம்.
மக்காச்சோள ரகம் சூப்பர் 244, ஏ.டீ.எம்.: விவசாயிகளின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் விபரங்களுக்கு: காவேரி சீட் கம்பெனி லிமிடெட், 1/27, ஏ.பீ. காந்திநகர், 2வது தெரு, காட்டூர் பஸ் ஸ்டாப் அருகில், வடகாட்டூர், திருச்சி-19. 99944 15020. தென்தமிழகம்-99442 67829. சேலம், தர்மபுரி-99943 34196; திண்டுக்கல், கோவை-98942 60469.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

