தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : செப் 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய ரகம்: த.வே.ப.க. நிலக்கடலை கோ.6: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த நிலக்கடலை ரகம் எக்டருக்கு மானாவாரியில் 1914 கிலோ காய்கள் மகசூலாகக் கொடுக்கிறது. இது வி.ஆர்.ஐ. ஜி.எண்.7, உள்ளூர் நிலக்கடலை ரகங்களைவிட முறையே 29.4 மற்றும் 77.1 சதம் அதிக மகசூலாகும். இந்த புதிய ரகத்தின் வயது - 125-130 நாட்கள். பருவம்: மானாவாரியாக வைகாசிப் பட்டத்தில் பயிரிட ஏற்றது. அதிகபட்ச மகசூல்: 3236 கிலோ/எக்டர்.

உருவாக்கம்: சி.எஸ்9/ஐ.சி.ஜி.எஸ்5 கலப்பின சந்ததிகளில் தேர்வு செய்யப்பட்டது.

பயிரிட உகந்த மாவட்டங்கள்: நாமக்கல் மாவட்டம்.

இதன் சிறப்பியல்புகள்: வறட்சியை தாங்கி வளரும் தன்மை; காய்கள் கொத்தாகக் காணப்படும்; உடைப்புத்திறன் 73.5 சதம். விரும்பத்தக்க வகையில் காய்களின் குணங்கள்; அதிக எண்ணெய்ச்சத்து (49.5 சதம்) கொண்ட பருப்புகள்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஆராய்ச்சி இயக்குனர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்), கோயம்புத்தூர்-641 003. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

* த.வே.ப.க. உளுந்து கோ.6: இந்த புதிய உளுந்து ரகம் சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வயது 60-65 நாட்கள். மகசூல்: 733 கிலோ/எக்டர். இது வம்பன் (பி.ஜி)4, வம்பன் (பி.ஜி)5 ரகங்களைவிட 13 மற்றும் 12 சதம் கூடுதல் மகசூலாகும். அதிக பட்ச மகசூல்: 1800 கிலோ/எக்டர். உருவாக்கம்: டி.யூ.2/வி.பி.20 ரகங்களின் இனக்கலப்பு. பருவம்: புரட்டாசிப்பட்டம். பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் உளுந்து பயிரிடப்படும் மாவட்டங்களுக்கு உகந்தது.

சிறப்பியல்புகள்: குறுகிய கால ரகம்; ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடையும் தன்மை, காய்கள் வெடிக்காத பண்பு; பருமனான விதைகள், 100 விதைகளின் எடை 5.5 கிராம். அதிக மாவு தரும் தன்மை; மஞ்சள் தேமல், நுனிக்கருகல், வேர் அழுகல் நோய்களுக்கு ஓரளவு எதிர்ப்புசக்தி கொண்டது; அசுவினி, தண்டு ஈ, புள்ளி காய்ப்புழு தாக்குதலை தாங்கி வளரக்கூடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us