sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : நவ 27, 2013

Google News

PUBLISHED ON : நவ 27, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோழிக்கழிவுகள்: கோழிப் பண்ணைத் தொழிலில் முக்கிய பிரச்னை அதன் கழிவுகளே ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 4 மில்லியன் டன் கோழிக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. உலர்ந்த, ஈரமான கோழிக்கழிவுகளை படுக்கைகளாக பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை எரு தயாரிப்பில் பிறகு பயன்படுத்தப்படுகின்றன. மாற்று எருக்களை காட்டிலும் கோழி எருவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றது. கோழியின் புதிய எச்சத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான அளவில் யூரிக் அமிலம், யூரியாவும் கனிம பாஸ்பரஸ் 0.3 முதல் 2.4 சதவீதமும், அங்கக பாஸ்பரஸ் 0.1 முதல் 1 சதவீதமும் காணப்படுகிறது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் நுண் உயிர்கள் போதுமான அளவு உள்ளன. கோழிக்கழிவிலிருந்து உருவாக்கப்படும் எரு மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது. இந்த எருவில் கால்சியம் சத்தின் அளவு அதிகமிருப்பதால் உவரிதன்மையுள்ள களர் நிலங்களை சீர்செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி கோழிக்கழிவுகளைப் பயன்படுத்தும் முறை: கோழிகளின் புதிய கழிவுகளை பயன்படுத்துவது மிக கடினமான ஒன்று. ஏனெனில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். கோழிக்கழிவுகளின் பாஸ்பேட், கந்தகம் ஆகியவற்றைச் சேர்த்து எருவாக்கும் போது ஊட்டச்சத்து நிறைந்த எரு கிடைக்கிறது கந்தகம். எருவின் கார அமிலத்தன்மையை குறைத்தல் அம்மோனியா வெளியேறுவது தடுக்கப்படுகிறது.

செஞ்சந்தனமரம்: அணுக்கதிர்வீச்சை தாங்கும் தன்மை கொண்டது பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களை தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் விளையும் 90 சதவீதம் செல்களை ஜப்பான் நாடு இறக்குமதி செய்கிறது. ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர் போன்ற கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள் சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டை பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தரும் இடம் திறன் கொண்டது. வெப்பத்தையும் அதிக அனல் கடத்தா கலை பொருட்கள் செய்வதற்கும், கிடாரி போன்ற இசை கருவிகள் செய்வதற்கும் இம்மரத்தை பயன்படுத்துகிறார்கள். இம்மரம் சரளை மற்றும் செம்மண், காந்தமண் வகைகளில் சிறப்பாக வளரக்கூடிய படுகை நிலத்தில் கூட நன்றாக வளரும். ஆனால் நல்ல வடிகால் வசதி அவசியம்.

ஆழமான மண் கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். உங்களுக்கு தேவையான செஞ்சந்தன மரக்கன்றுகளை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். செஞ்சந்தனம் பலன் கொடுக்க 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். மரங்கள் நன்றாக முதிர்ந்ததும் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா வாங்கி மாவட்ட வனத்துறை அலுவலரிடம் கொடுத்தால் அவர்கள் நம்முடைய நிலத்தில் இருக்கும் மரங்களை வனச்சரகர் மூலம் ஆய்வு செய்து வெட்டுவதற்கு அனுமதி வழங்குவார்கள். வெட்டிய பிறகு வனத்துறை அதிகாரிகளை அணுகினால் ஒரு குறியீடு கொடுப்பார்கள். அந்த குறியீட்டைப் பொறுத்து மரத்தை விற்பனைக்காக இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். (தகவல்: நீலகிரி மாவட்ட வன காவலர் பதிரசாமி இ.வ.வ)

முயல் வளர்ப்பு: முயல்கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். முயல்கறிகளில் குறைவான கொழுப்பு அதிக புரதம், குறைந்த கலோரி உள்ளதால் சாப்பிட்டவுடனே செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு ஜெயன்ட் சாம்பல், ஜெயன்ட் சோவியத்சின்சிலா நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் இறைச்சிக்கு ஏற்றவை. இவை 3 மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ வரை எடை வரக்கூடியது.100 முயல்களுக்கு 10 சென்ட் நிலம் என்கிற விகிதத்தில் பசுந்தீவனங்களாக சாகுபடி செய்ய வேண்டும்.

அருகம்புல், வேலியில் அகத்தி, மல்பெரி, தட்டைச்சோளம் போன்றவை முயல்களுக்கான தீவனங்கள் பருவமடைந்த முயல்களுக்கு தினமும் 200 கிராம் பசுந்தீவனம், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். தொடர்புக்கு: முரளிதரன் 94431 82961

டாக்டர். கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us