sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : டிச 04, 2013

Google News

PUBLISHED ON : டிச 04, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுவைக்கேற்ற ஒப்பற்ற நெல்ரகம் கோ 51: குறுகிய கால ரகமான இது 105 - 110 நாட்களில் விளைச்சலை தர வல்லது. இந்த ரகம் அளவான உயரத்துடன் அதிக தூர்கள் பிடித்து சாயாத தன்மைக்கொண்டது. பொதுவாக சாகுபடி செய்யப்பட்ட எல்லா இடங்களிலும் ஏடீடி 43 ரகத்தை விட சராசரியாக 10 சதம் அதிக விளைச்சல் கொடுத்துள்ளது. எக்டருக்கு சராசரியாக 6623 கிலோ நெல் விளைச்சல் கொடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு.பி.சூரியமூர்த்தி 10 ஏக்கருக்கும் மேலாக கோ.31 ரகத்தை சாகுபடி செய்து ஏக்கருக்கு சராசரியாக 2800 கிலோ (43 மூட்டைகள்) விலைச்சல் எடுத்துள்ளன. பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருப்பதாக உழவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்சமயம் தஞ்சை மாவட்டம் வாண்டையார் இருப்பு கிராமத்தில் திருமதி. திலகம் உள்ளிட்ட பலர் டிராக்டரை கொண்டு விதைக்கும் கருவியின் மூலம் நேரடியாக புழுதி விதைப்பு செய்ததில் கோ.51 ரகத்தின் மூலம் அதிக விளைச்சல் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த ரகத்தினை அலசி சன்னமாக இருப்பதால் சந்தையில் அதிக விலை கிடைத்ததாகவும் பெரும்பாலான விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (தகவல் : முனைவர் ச.இராபின், முனைவர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு வேளாண் டைட்டல் கலைக்கழகம், நெல்துறை கோயம்புத்தூர் - 641 003, தொலைபேசி 0422 - 247 4967

சிறுகீரை ரகம் பி.எல்.ஆர்.1: கடலூர் மாவட்டம், பாலூரில் உள்ள த.வே.ப. கழகத்தின் காய்கறி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகீரையில் முதல் ரகம் தான் பாலூர் 1 சிறுகீரை. இந்தக்கீரை வடகிழக்கு மண்டலத்தின் பருவநிலை, மண் தன்மைக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

பாலூர் 1 ரகத்தின் கீரை முழுவதும் பச்சை நிறமுடையது. எனவே அனைவராலும் அதிகம் விரும்பக்கூடியதாக உள்ளது. சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாகவும் இருக்கிறது. உயர்விளைச்சல் திறன் கொண்டது. ஒரு ஏக்கரில் 6 முதல் 9 டன்கள் வரை கீரை கிடைக்கும். 20 நாட்களுக்கு கீரை விளைச்சலுக்கு வரும். மிக குறுகிய காலத்தில் கீரையாக அறுவடை செய்யலாம். எல்லா பருவத்திற்கும் ஏற்றது. பலவகையான மண்வகை கலனும் பயிரிட ஏற்றது. மழைக்காலம் நீங்கலாக எல்லா மாதங்களிலும் பயிரிடலாம். சிறுகீரை பச்சடி, கடைசல் கூட்டுப் பொரியல் போன்ற பலவகையான சமையல்களுக்கும் ஏற்றது. நல்ல சுவையுடையது.

இக்கீரை இலையைத் தின்னும் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை, வெள்ள துரு நோய் போன்றவற்றிற்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது.

சத்துக்களின் அளவு (100 கிராம் கீரையில்):

அஸ்கார்பிக் அமிலம் - 12.5 மி.கி

நார்ச்சத்து - 2.11 கி

புரதம் - 1.91 கி

சுண்ணாம்பு சத்து - 0.26 கி

இரும்பு - 3.54 மி.கி

கரோட்டினாய்டு - 20.4 மி.கி

இந்த ரகத்தில் ஆக்ஸலேட் என்ற நச்சு பொருளின் அளவு குறைவாக உள்ளது. விதை உற்பத்தியை பொருத்தவரை 50-55 நாட்களில் விதை அறுவடைக்கு தயாராகும். எக்டருக்கு 200 கிலோ விதை கிடைக்கும். விதைகளால் உற்பத்தி செய்து விற்பதால் உழவர்கள் அதிக லாபம் அடையலாம்.

விதைப்பதற்கு எக்கடருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். நிலத்தை 4 முறை உழ வேண்டும். விதைப்பதற்கு முன்பு சூடோமோனால் புளோரசனிஸ் 10 கிராம் (அ) கார்பண்டாசிம் 1 கிராம் மருந்தை 1 கிலோ விதையுடன் கலந்து 2மீ ஙீ 1.5 மீ பகுதியை அடைத்து அதில் விதைக்க வேண்டும்.

தகவல்: முனைவர் க.சக்திவேல், முனைவர் எம்.எஸ்.அனீசாராணி, முனைவர் க.தனலெட்சுமி, காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர் - 607 102 கடலூர் மாவட்டம். போன். 04142 -275 222

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us