
முந்திரி பழ மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்: (முந்திரி பழ ஜூஸ், முந்திரிபழ சிரப்பு, முந்திரி பழ ஜாம், முந்திரி மிட்டாய்) ஒரு எக்டரிலிருந்து 500 கிலோ முந்திரிக்கொட்டை கிடைக்கிறது. கொட்டை நீக்கப்பட்ட முந்திரிப்பழத்தை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. காரணம் அதில் உள்ள 'டானின்' என்ற வேதிப்பொருளாகும். பழத்தை சாப்பிடும் போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படும். இதனைப்போக்க பழத்தை நீராவியில் வேகவைத்து அல்லது உப்பு நீரில் ஊறவைத்து, கரகரப்புத் தன்மையை நீக்கிய பின்னர் பழத்திலிருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் (கேன்டி) போன்ற மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
முந்திரிபழ ஜூஸ்: முந்திரிப்பழத்தை நன்றாக கழுவி அலுமினியம் அல்லது சில்வர் தட்டுகளில் பரப்பி ஆவியில் 5 முதல் 10 நிமிடம் வேகவைக்க வேண்டும். பின்னர் அவற்றை குளிர்ந்த தண்ணீரில் நன்றாகக் குளிர விடவும். பின்னர் சாறுபிழியும் இயந்திரங்களைக் கொண்டு சாற்றை பிழிந்து எடுக்க வேண்டும். பின்னர் அவற்றை மெலிதான துணியில் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய சாற்றை ஒரு கிலோவிற்கு 430 மி.கி. என்ற அளவில் ஜலடினை சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடம் வைக்க வேண்டும். தெளிவான பழரசத்தை (அதாவது ஒரு கிலோ ஜூஸ்-க்கு) 60 கிராம் சர்க்கரையை கொதிக்க சேர்க்க வேண்டும். பின்னர் அவற்றை வைத்து 90-95 டிகிரி செல்சியசில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும்.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் க.கீதா, முனைவர் எம்.அசோகன், வேளாண்மை அறிவியல் நிலையம், புதுக்கோட்டை. போன்: 04322- 290 321.
கொதிக்க வைத்த அரிசி தவிட்டின் பயன்பாடுகள்: அரிசி தவிட்டில் ஒரைசனால், டோகோ பெரால், டோக்கோட்ரினின், பைட்டோஸ் டிரால், பைட்ரக் அமிலம், அரபினோஸ், பினாலிக் அமிலங்கள், வெக்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே அரிசி தவிட்டை நொதிக்கச் செய்து அதன் மூலம் பயனுள்ள பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து அரிசி தவிட்டின் மதிப்பை உயர்த்தலாம்.
ஈஸ்ட் மூலம் நொதிக்கச் செய்தல்: நொதிக்க வைப்பதன் மூலம் அரிசி தவிட்டின் புரதம், தாதுக்கள் அதிகமாகச் செரித்து இரத்தத்துடன் கலக்கின்றன. நொதித்தப்பின் புரதச்சத்து எளிதில் செரிமானமாகக்கூடியதாக மாறுவதற்கு சாக்ரோமைஸியே செரிவிசியே வகைகளை அதிக அளவில் உதவுகின்றன. ஒரு செல் புரதங்கள் அள வும் அதிகரிப்பதற்கு உடலில் பல நன்மைகளை அளிக்கின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள தீமை அளிக்கும், உடலுக்கு ஒவ்வாத பல பாக்டீரியாக்களை சாக்ரோமைஸியே அழிக்கிறது.
நொதிக்க வைத்த அரிசி தவிட்டை 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 5 முதல் 6 மணி நேரம் உலர்த்த வேண்டும். பின்பு அரைத்து பொடி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது அரிசி தவிட்டைப் பொடியை இட்லி, தோசை மாவில் கலந்து பயன்படுத்தலாம்.
உணவுப் பொருட்கள்: நொதிக்க வைத்த அரிசி தவிட்டில் அதிக ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அரிசி தவிட்டில் அதிக நார்ச்சத்து காணப்படுவதால் மலச்சிக்கலை குணப்படுத்தப்பயன்படுகிறது. குக்கீஸ் உணவு, இட்லி மிக்ஸ், தோசை மிக்ஸ், பிரட் மஃபின், பிஸ்கட், நூடுல்ஸ் போன்ற உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு முனைவர் இ.ஜான்சன், முனைவர் து.சீனிவாசன், முனைவர் ஜோ.ஷீலா, முனைவர் ந.சோபா, தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்- 642 101.
சிறு தானியங்களில் தோல்நீக்கும் இயந்திரம்: கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சி.பாலசுப்ரமணியன் தெரிவிப்பது, தினை,சோளம், வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற தானியங்கள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் தோல் நீக்குவதில் கூடுதல் நேரம் எடுக்கும். 30 சதவீதம் உமி இருப்பதால் அப்படியே உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. சிறு தானியங்களை உடைத்து உமி மற்றும் தவிடை முற்றிலுமாக அகற்றும் வகையில் சி.ஐ.ஏ. இ. (இஐஅஉ Mடிடூடூஞுt) என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இதன் விலை ரூ.60,000/-. மேலும் விபரங்களுக்கு ''முதன்மை விஞ்ஞானி'' மண்டல அலுவலகம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர்-641 003. போன்: 86810 17811.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

