sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : மார் 12, 2014

Google News

PUBLISHED ON : மார் 12, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நானோ பயோடெக் அறிமுகப்படுத்தும் நானோ துகள்: அதிநவீன விவசாய தொழில்நுட்பம்.

கரும்பின் வளர்ச்சியை தொடர்ந்து அதிகரிக்க நானோ துகள் தெளிப்பு உதவி செய்கிறது. கரும்பு வளர வளர அதற்கேற்றாற்போல் தெளிப்பானின் உயரத்தை அதிகரித்துச் செயற்கை மழைபோல் இலைகளின் மேல் நானோ பயோ துகள்கள் தெளிக்கப்பட்டு அதிகமான மகசூல் பெற வழிவகை செய்கிறது.

பயிருக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணுட்டச்சத்துக்களை இலைவழி மற்றும் வேர்களின் மூலம் செடிகளை அடைய செய்து, அதன் மூலம் ஒளிச்சேர்க்கையை மேம்படுத்துவதன் மூலம் அதிகமான வகை திறன் மற்றும் பலவிதமான நோய் மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியைப் பயிர் அடைகிறது.

முழுமையாக ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்பவர்களுக்கும், அதிக மகசூல் எடுக்க இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. தொழிற்சாலை கழிவுகளால் கெட்டுப்போன உபயோகப்படுத்த தகுதியிழந்த மண்ணை சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றுவதற்கு இந்த அதிநவீன தொழில்நுட்பம் வகை செய்கிறது. மேலும் விபரங்களுக்கு: புரபசர் ராஜசேகர், செல்: 93809 54559.

நிலக்கடலை சாகுபடி: நல்ல விளைச்சல் எடுக்க வேண்டுமானால் அந்தந்த பகுதிக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்து விதைக்க வேண்டும். திண்டிவனம் -13 ரகத்தில் சிகப்பு வண்ணப்பருப்பு இருக்கும். இது அதிக எண்ணெய்ச்சத்து கொண்டது.

திண்டிவனம் -7 ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இது மானாவாரி, இறவை என இரண்டு சாகுபடிக்கும் ஏற்றது.

விருத்தாசலம்-2 ரகம் பெரிய பருப்பு கொண்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம்.

விருத்தாசலம் -6 ரகம் சிறிய பருப்பாக இருந்தாலும் எண்ணெய் சத்து அதிகம் கொண்டது. சாப்பிடவும் ஏற்றது. விதைகள் வாங்க பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் க.O.

த.வே.ப.கழக விதைகள் விற்பனைக்கு:

பயிர் - இரகம் - இருப்பு (கிலோ) - கிடைக்கும் இடம்

பாசிப்பயறு - கோ.6 - 195 - வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கின்னிகுளம் - 628 252., தூத்துக்குடி மாவட்டம். போன்: 04630 261 226

- வம்பன் - 4 - வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கின்னிகுளம் - 628 252., தூத்துக்குடி மாவட்டம். போன்: 04630 261 226

- - 575 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை - 625 512. போன்: 04546 - 292 615

- வி.ஆர்.எம். - 266 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம் - 632 104. போன்: 0416 - 227 2221

- கோ.7 - 106 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி - 628 501. போன்: 04632 - 220 533./ வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் - 642 101. போன்: 04253 - 288 722

உளுந்து - ஆடுதுறை.5 - 75 - பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை - 626 107. போன்: 04566 - 220 562

- - 363 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை - 625 512. போன்: 04546 - 292 615.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us