sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : ஆக 27, 2014

Google News

PUBLISHED ON : ஆக 27, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய் மற்றும் தடுக்கும் முறைகள் : இரத்தக்கழிச்சல் இளங்கன்றுகளைத் தாக்கும் முக்கியமான ஒரு செல் ஒட்டுண்ணி நோயாகும்.

நோய்க்காரணி : இந்நோய் பத்திற்கும் மேற்பட்ட எய்மீரியா என்ற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. அவற்றில் எய்மீரியா சுர்ணை எ.போவிஸ் மற்றும் எ.சிலிண்ட்ரிகா போன்ற ஒட்டுண்ணி வகைகளின் தாக்கம் அதிகமாக கன்றுகளில் காணப்படும்.

நோய்பரவும் விதம் : இரத்தக்கழிச்சலால் பாதிக்கப்பட்ட கன்றின் சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணிகளின் உறை முட்டைகள் வெளியேற்றப்படுகிறது. இந்த உறை முட்டைகள் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் 2 முதல் 10 நாட்களுக்குள் நோயுண்டாக்கும் நிலையை அடைந்து தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டி மற்றும் கொட்டகையின் பல இடங்களுக்கு பரவி விடும். ஆரோக்கியமான கன்றுகள் இந்த நோயுண்டாக்கும் நிலையை தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாக உட்கொள்ளும் போது நோய் தாக்கம் ஏற்படுகிறது.

நோய் கண்டறியும் முறை : நோயின் முக்கிய அறிகுறிகளான குழி விழுந்த கண்கள், இரத்த சோகை, இரத்தம் சளி கலந்த தண்ணீர் போன்ற பீச்சியடிக்கும் வயிற்றுப்போக்கு காணப்படுவது, சாணப் பரிசோதனை செய்து எய்மீரியா உறை குட்டை உள்ளதா என கண்டறிவது.

நோயைத்தடுக்கும் முறை : தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீருடன் சாணம் கலக்காமல் இருக்க தொட்டியை சற்று உயரத்தில் வைக்க வேண்டும். சிறிய கொட்டகைகளில் அதிக கன்றுகளை அடைக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட கன்றுகளை தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாணத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். எய்மீரியா உறை முட்டைகளை அழிக்கும் கிருமிநாசினி (பினாயில் மற்றும் 5 விழுக்காடு பார்மலின்) கொண்டு கழுவி விட வேண்டும்.

(தகவல்: முனைவர் நா.ராணி, முனைவர் கு.பொன்னுதுரை, முனைவர் க.ரம்பா, முனைவர் ர.வேலுசாமி கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்).

பாசன நீர் தன்மைக்கேற்ப தாங்கி வளரும் பயிர்கள்

நீரின் குணம் - நல்ல வடிகால் வசதி - ஓரளவு வடிகால் வசதி - குறைந்த வடிகால் வசதி

நல்ல நீர் - அனைத்துப்பயிர்கள் - அனைத்துப்பயிர்கள் - அனைத்துப்பயிர்கள்

மிதமான உவர்நீர்- காய்கறிகள், உருளைக்கிழங்கு, மனிலா வேலிமசால், வாழை, பூ வகைகள் - மக்காச்சோளம், கம்பு, கொண்டைக்கடலை, எள், சூரியகாந்தி, குதிரைமசால், கேழ்வரகு - கரும்பு, நெல்.

நடுத்தர உவர்நீர் - மிளகாய், தீவனச்சோளம், மக்காச்சோளம் - மாதுளை, கொய்யா, பப்பாளி, கோதுமை, சப்போட்டா - இலந்தை, தீவனப்புற்கள், சப்போட்டா

அதிக உவர்நீர் - மிளகாய், மரவள்ளி, இலந்தை குதிரை மசால், கறிவேப்பிலை - சோளம், கோதுமையின் சில இரகங்கள், பாராபுல், கொடுக்கட்டைபுல் - சவுண்டல் மரம்

மிக அதிக உவர்நீர் - பருத்தி, தென்னை, சவுக்கு, நீர் புல், சுகர்பீட் - தீக்குச்சி மரம், ஆச்சா மரம் - கருங்காலி மரம், கருவேல மரம்

அபரிமிதமான உவர்நீர் - சுகர் பீட் - வாகை மரம் - ----

மிதமான களர் உவர்நீர் - முயல் மசால், தானியப்பயிர்கள், மல்பெரி - பெர்முடாபுல், கர்னால் புல், கரும்பு பருத்தி - நெல்லில் சில இரகங்கள்

அதிக களர் உவர்நீர் - ஜிப்சம் உபயோகித்து களரைக் குறைத்தப் பின் பயிரிடலாம்.

சுண்ணாம்பு நிறைந்த மண்ணில் கந்தகத்தை உபயோகிக்கலாம்.

(தகவல் : முனைவர் டி.ஜெயந்தி, முனைவர் பா.சே.பாண்டியன், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1378, 661 1278).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us