sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : அக் 01, 2014

Google News

PUBLISHED ON : அக் 01, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் : தரமான விதை, விதை அளவு 3 கிலோ / ஏக்கர், குறைந்த பரப்பளவு நாற்றங்கால் (1சென்ட் / 1 ஏக்கர்), பாய் நாற்றங்கால் குறைந்த வயதுடைய நாற்று (14 நாட்கள்), நடவு வயலுக்கு இயற்கை மற்றும் பசுந்தாள் உரமிடல், நடவு வயலை சமப்படுத்துதல், சதுர நடவு முறையில் நடவு, ஒற்றை நாத்து நடவு, கோனோ கருவியைக் கொண்டு களை எடுத்தல், நீர் மறைய நீர் கட்டுதல், பச்சை நிற வண்ண அட்டையை கொண்டு உரமிடுதல்.

ஐஸ்வர்யா - ஆராய்ச்சி நெல் : ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ் வெளியிட்டுள்ள இந்த ரகம் சன்ன ரகத்தைச் சார்ந்தது. மகசூல் திறன் 35 -40 குவிண்டால் / ஏக்கர் வயது 120 -125 நாட்கள். எல்லா பருவத்திற்கும் எல்லா பகுதிகளுக்கும் பயிரிட ஏற்றது. புகையான் மற்றும் கொலைநோய் தாக்குதலை தாங்கி வளரும் தன்மை கொண்டது. விதை விதைத்த 15 லிருந்து 25 நாட்களுக்குள் நாற்றை விடவும். காய்ச்சல், பாய்ச்சல் முறையில் தண்ணீர் கட்டவும். அனைத்து கதிர்களிலும் 300க்கு மேற்பட்ட நெல்மணிகளைக் கொண்டு அதிக மகசூல் தரவல்லது. சன்ன ரகமாக இருப்பதால் சந்தையில் வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு SRI KRISHNA SEEDS, WCR Plot No. 13A, SIDCO 1 INDUSTRIAL Estate, Thuvakudy, Trichy15. ÷£õß: 75988 77573. (e) srikrishnaseeds@ gmail.com.



மானாவாரிக்கேற்ற பயிர்களில் புதிய உயர் விளைச்சல் இரகங்கள்

அண்ணா (பி.எம்.கே.4) நெல் :
நடுத்தர உயரம் மற்றும் சாயாத தன்மை, 100-105 நாட்கள் வயதுடையது, வறட்சியைத் தாங்கும் திறன், மானாவாரியில் சராசரியாக எக்டருக்கு 3.7 டன் மகசூல் தரவல்லது.

கோ.(எச்.எம்)6 வீரிய ஒட்டு மக்காச்சோளம் : அதிக மகசூல் தரக்கூடிய ஒற்றைக் கலப்பு இரகம், 110 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் புரட்டாசிப் பட்டத்திற்கு ஏற்றது. அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்திறன், தண்டு துளைப்பான் பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத்திறன், மானாவாரியில் சராசரியாக எக்டருக்கு 5000 கிலோ மகசூல் தரவல்லது.



கோ(சி.யு)9 கம்பு :
நீளமான கதிர்கள் (45 செமீ) அதிக தூர் எண்ணிக்கை

(4-6), 80-85 நாட்கள் வயதுடையது. அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. மானாவாரியில் சராசரியாக எக்டருக்கு 2350 கிலோ மகசூல் தரக்கூடியது. (தகவல் : வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை).



உப்புநீரை பாசனத்திற்கு பயன்படுத்த :
களரிப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவிக்கும் நுட்பங்கள். குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன். அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை நிரப்பி அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினார். மழைநீர் சேகரிப்பு தொட்டி தயாராகி விடும். இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். காலப்போக்கில் உப்புத்தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.

தவிர தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் அது மண்ணில் உள்ள உப்புத்தன்மைக் குறைக்கிறது. நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய திருச்சி1, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். கூடவே இயற்கை உரங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு, வரகு போன்ற உப்புத்தன்மையைத் தாங்கி வளரும். சிறு தானியங்களையும் சாகுபடி செய்யலாம். பழமரங்களைப் பொறுத்தவரையில் கொய்யா, புளி, நாவல், நெல்லி போன்றவற்றை இந்த மாதிரியான நிலத்திற்கு ஏற்றதாக இருக்கும். (தொடர்புக்கு: தொலைபேசி - 044 - 274 52371).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us