sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : அக் 15, 2014

Google News

PUBLISHED ON : அக் 15, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற உத்திகள்: தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெல்லாரி வெங்காயம் சாகுபடியாகிறது. விதைக்கு ஏற்ற சரியான பருவம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நாற்று விட்டுப் பயிர் செய்தால் சிறப்பாக இருக்கும். ஏற்ற இரகங்கள் அக்ரி பவுண்டு, கருஞ்சிவப்பு, அல்கா கல்யாண்.

மார்ச் - ஏப்ரல் நாற்று விடும்போது நாற்றங்காலில் நோய் தாக்கும். நாற்று அழுகல் நுனிக்கருகல் நோய்கள் போன்றவை. எனவே தண்ணீர் தேங்காத நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். 20 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும். பாத்தியின் நீளம் 3 - 3 1/2 மீட்டர் அகலம் 30 செ.மீ. இருக்க வேண்டும். நல்ல மக்கிய தொழுஉரம் இட்டு கொத்தி விட வேண்டும்.

டிரைகோடெர்மா விரிடி 100 சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் இயற்கை உரத்துடன் கலந்து இட வேண்டும். 500 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர், 400 கிராம் பொட்டாஷ் உரம் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் என்ற அளவில் கணக்கிட்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பாத்தியில் 5-7 செ.மீ. இடைவெளியில் கோடுகள் இருக்க வேண்டும். விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு 100 சதுர மீட்டர் போதுமானது. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 300 சதுர மீட்டரில் 3 கிலோ விதை கொண்டு நாற்றங்கால் அமைக்க வேண்டும். காய்ந்த சருகு அல்லது வைக்கோல் கொண்டு மூடாக்கு போட வேண்டும் விதைகள் முளைத்து வந்தவுடன் மூடாக்கினை அகற்றி விட வேண்டும்.

நாற்றழுகல் நோய் தென்பட்டவுடன் திரம் மருந்தினை தெளிக்க வேண்டும். 1 லிட்டருக்கு 3 கிராம் என்ற அளவில் 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். ரோகார் அல்லது மெடாசி ஸ்டாக்ஸ் போன்ற பூச்சி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். 1 லிட்டர் நீருக்கு 2 மிலி என்ற அளவில் நடவின் போது நாற்று 0.5 - 0.8 செ.மீ. விட்டத்துடன் பருமனாக இருக்க வேண்டும். 4 - 5 இலைகள் இருக்க வேண்டும். நாற்றுக்களைப் பறித்து 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டாசிக் மானோகுரேஸ் 1 மிலி / லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து ஒட்டும் திரவம் சேர்த்து தெளிந்த பின் நடவு செய்ய வேண்டும். நாற்றுக்களை கவனத்துடன் தயாரித்தால் 7வது வாரத்தில் நாற்று நடவுக்கு தயார் ஆகி விடும். அடியுரமாக 45 கிலோ யூரியா, 400 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தவிர நன்கு மக்கிய தொழுஉரம் ஏக்கருக்கு 10 டன் இட வேண்டும். தொழுஉரத்தினை 20 கிலோ துத்தநாக சல்பேட்டையும் சேர்த்து இட வேண்டும். நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து 5 கிலோ யூரியா நன்கு பொடிசெய்த வேப்பம்புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும். தசகவ்யா ஒரு லிட்டர் நீருக்கு 3 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். 4-5 முறை தெளிக்கலாம். ஏக்கருக்கு 10 லிட்டர் அளவில் நீரிலும் கலந்து விடலாம்.

நடவு வயலில் 3-4 முறை உழுது 45 செ.மீ. இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நாற்றுகளை பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 5-7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

மாடித்தோட்டம் அமைக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை : திறந்தவெளி மாடியில் தரை தண்ணீர் உட்புகாதவாறு இருக்க வேண்டும். வளர் ஊடகம் குறைந்த எடை கொண்டதாக இருக்க வேண்டும். வளர் தொட்டிகள், பாத்திகள் அமைக்கும் போது மாடியின் மீது அதிக எடையை ஏற்றக் கூடாது. திறந்தவெளி மாடியின் மீது தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்தொட்டி பாத்தியின் அடிப்பகுதியில் அதிக தண்ணீரை வெளியேற்றுவதற்கு சிறிய துவாரம் இட வேண்டும். கூடுமான வரையில் குறைந்த செலவில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். கோடைக்காலங்களில் கண்டிப்பாக நிழல்வலை மூடாக்கைக் கொண்டு மாடித்தோட்டத்தை அமைக்க வேண்டும். இரசாயன உரங்கள் பயிர்பாதுகாப்பு வேதிப்பொருட்கள் பயன்பாட்டினை கூடுமானவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். இயற்கை உரங்களான தொழுஉரம், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு முதலியவற்றை பயன்படுத்தவும்.

நாற்று விடுதல் : தக்காளி, கத்தரி, மிளகாய், சின்ன வெங்காயம், குடை மிளகாய், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர்.

விதை விதைத்தல் : வெண்டை, குத்து அவரை, முருங்கை, கொத்தவரை, கருவேப்பிலை, கொத்தமல்லி (விதையை இரண்டாக உடைத்து) கீரை, பாகல், வெள்ளரி, பீர்க்கன், புடலை போன்றவை. (தகவல் : முனைவர். சே.மாரியப்பன், தி.சரஸ்வதி, ஷோபா திலகமணியன், த.சுமதி, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோவை-641 003. போன் : 0422 - 661 1268.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us