தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்ன சின்ன செய்திகள்!

சின்ன சின்ன செய்திகள்!

சின்ன சின்ன செய்திகள்!


PUBLISHED ON : ஜூன் 03, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுதானிய மதிப்பூட்டும் இயந்திர மையம்: சிறுதானியங்களை அறுவடை செய்தவுடன் அதிலுள்ள சிறு சிறு கற்கள், மண்களை அகற்றுவது மிகவும் அவசியம். இதற்காக பல புதிய கருவிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.

சிறுதானிய உமி நீக்கி இயந்திரம்: சுத்தம் செய்த சிறு தானியத்தை அப்படியே உணவுக்கு பயன்படுத்த முடியாது. இந்த புதிய கருவியைக் கொண்டு சிறுதானியத்தில் உள்ள உமியை நீக்கி சுத்தமான சிறுதானிய அரிசியைப் பெறலாம்.

சிறுதானியத்தில் உள்ள கல், மண் ஆகியவற்றை அகற்றுவதற்கான புதிய கருவியை வெளியிட்டுள்ளார்கள். இதில் அறுவடை செய்த தானியத்தை கொட்டினால் இயந்திரம் மூலம் தானியத்தில் உள்ள சிறு கற்கள், குருணைகள், மண் தூள்கள் ஆகியவற்றை அகற்றி விட்டு சுத்தமான சிறுதானியத்தைப் பெறலாம்.

சிறுதானிய மாவு அரைக்கும் இயந்திரம்: சிறுதானிய அரிசியிலிருந்து சிறுதானிய சத்துமாவு தோசை மாவு, லட்டு போன்றவற்றை தயாரிக்க சிறுதானிய அரிசியை அரைக்க வேண்டும். இதற்கு சாதாரண அரைக்கும் இயந்திரமும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய கருவிகளை ஒரு யூனிட்டில் பொது இடங்களில் பொருத்தி இளைஞர்களை இதை ஒரு சுயவேலைவாய்ப்பாக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது.

இதற்காக அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்களிலும் இயந்திர செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகவல் : முனைவர் நா.ஸ்ரீராம், முனைவர் கு.மகேந்திர குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம்-636 204. தொலைபேசி : 0424 - 242 2550.

நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா: விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது. ஆனால் விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள். உடனே 044 - 6680 2927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர் அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினியர், ஐடி ஊழியர் என்ற எந்தத்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கிறார்கள். தொடர்புக்கு : ஜானகிராமன், அலைபேசி: 91500 09998.

நெல் நாற்று வளர்க்கும் தட்டு: நெல் விவசாயத்தில் ஒரு புரட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஜப்பான் தொழில்நுட்பத்தில் குறைந்த விலைக்கு விவசாயங்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு : ''ஆப்பிள்இன்டெக்ஸ், ஆர்.ரமணக்குமார் எம்.பி.ஏ. 14, டாக்சர் சந்து நடு குஜிலித்தெரு, மேலபுலிவார் ரோடு, திருச்சி-620 008, பஸ் ஸ்டாப் மரக்கடை. அலைபேசி: 94437 37232, 90470 06075, போன் : 0431 - 406 0400.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் பண்ணைக்காடுகள் திட்டம் : குறைந்த பட்சம் 1 ஏக்கர் நிலம் தேவை. தரமான குளோனல் நாற்றுகள் விவசாய நிலங்களுக்கே மானிய விலையில் விநியோகம். இலவச தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் உறுதியான சந்தை வாய்ப்பு வரப் பேரம் ஓரிரண்டு வரிசைகளில் சவுக்கு, தைல மரங்களைப் பயிரிடலாம். மேலும் விபரங்களுக்கு : வீரிய நாற்றுப்பண்ணை, வனத்தோட்டத்துறை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம்-639 136, கரூர் மாவட்டம். அலைபேசி : 94425 91412, 94425 91417.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us