PUBLISHED ON : ஜூன் 09, 2010

தென்னையில் இளங்காய்கள் உதிர்தல்: தென்மேற்கு பருவகாலங்களில் பைடோப் தோரா பாலிமிவோரர் பூசணம், இளங்காய்கள் உதிர்வதற்கு காரணமாகிறது.
அறிகுறிகள்: காய்களின் மேல், அடிப்பகுதியில் வண்ணம் மாறுதல் (பழுப்பு) மற்றும் காய்களின் அரைப்பகுதி வரை பரவியிருத்தல். காய்களின் உட்திசுக்கள் மிக மிருதுவாக இருத்தல். அழுகிய பருப்புகளிலிருந்து துர்நாற்றம் வீசும். பொதுவாக காய் உதிர்வு ஜனவரி-பிப்ரவரி, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சி வகை கள், எறும்புகள், பறவைகள் மற்றும் எலிகள் போன்ற இதர காரணங்களாலும் காய் உதிர்வு ஏற்படுகிறது.
காய்உதிர்வு மேலாண்மை: ஒரு சத போர்டோ கலவையை பருவமழைக்கு முன்னும் பின்னும் தெளிக்க வேண்டும். மரத்தின் கொண்டைப்பகுதியினை சுத்தம் செய்தல், உதிர்ந்த காய்களை எரித்தல், டிடிடி மற்றும் குளோரிமேன் பூச்சிகொல்லியை பயன்படுத்துதல், பாராக்வாட் களைக்கொல்லியை தண்டின் அடிப்பகுதியில் இடவேண்டும். எறும்பு புற்றுகளை கட்டுப்படுத்த டை எல்ட்ரின் தண்டின் அடிப்பகுதியில் இடவேண்டும்.
பயோ-ஜிங் (ஜிங் குளூகோனேட்): அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களும் ரசாயன வடிவில் உள்ளன. ஒரு சில மட்டும் கிலேட்டட் வடிவில் உள்ளன. பயிர்களுக்கு இடும்பொழுது கிலேட்டட் வடிவில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களே பெரிதும் விரும்பி இடப்படுகிறது. கிலேட்டட் வடிவில் உள்ள ஊட்டச்சத்துக்களைவிட பயிர்களுக்கு சிறிய அளவிலும் எளிதில் எடுத்துக்கொள்ளும் வடிவிலும் உள்ளன.
பயோஜிங் இலைவழி தெளிப்பு மற்றும் சொட்டு நீர்ப்பாசன வழி உரமிடுதலுக்கு ஏற்றது. அதிகப்படியான ரசாயன உரங்களை இட்டு தீவிர விவசாயத்தினால் அதிகப்படியான ஜிங் வளம் நிலத்தில் குறைந்து ஜிங் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக விவசாயத்தில் ஜிங் உரங்கள் பயிரின் ஆரம்ப வளர்ச்சிப்பருவத்தில்தான் இடுவர். பயிர்கள் ஜிங் ஊட்டச்சத்தை சிறிது நேரத்திற்குப் பின்தான் எடுத்துக்கொள்கிறது. அதாவது பயிர் சிறிது வளர்ந்தபின் வளர்ச்சி நேரத்தில் பயிர்கள் ஜிங் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. ஜிங் பற்றாக்குறையை சரியான நேரத்தில் போக்கி பயிர்களின் விளைதிறனை அதிகரிக்க ஜிங்கை இலைவழி தெளிப்பு உரமாக வேர் அல்லது சொட்டுநீர் பாசனம் மூலம் உரமிட வேண்டும்.
ஜிங் பற்றாக்குறை பயிர்கள்: நெல், மிளகாய், தானியங்கள் சோளம், பீன்ஸ், பருத்தி, உருளைக்கிழங்கு, கோதுமை, திராட்சை, கரும்பு, பட்டாணி, மலைப்பயிர்கள் மற்றும் பிற பயிர்கள்.
மண்வழி இடுதலுக்கு: பயோஜிங் குருணை வடிவில் பயிர்களின் ஆரம்ப வளர்ச்சி பருவத்திற்கு இடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஒரு ஏக்கர் நாற்றங்காலுக்கு 2 கிலோ பயோஜிங் குருணை இடவும். நட்ட மற்றும் விதைத்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 5 கிலோ பயோஜிங் இடவும். பயோஜிங் குருணையை பாஸ்பேட் உரம் இடுவதற்கு 18-20 நாட்களுக்கு முன் இடவும். மேலும் விபரங்களுக்கு கேடிசி பயோ டெக்னாலஜி பெர்டிலைசர்ஸ், கோவை, 0422-420 2040, 93631 52441, 93457 28306.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
