sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : செப் 14, 2011

Google News

PUBLISHED ON : செப் 14, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய உளுந்து ரகம் 'வம்பன் 6': தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த ரகத்தின் வயது 65-70 நாட்கள். மகசூல் ஒரு எக்டருக்கு இறவையில் 890 கிலோ. மானாவாரியில் 850 கிலோ. அதிகபட்சம் 1525 கிலோ. சராசரி மகசூல் 871 கிலோ. வம்பன் 1 ரகத்தைவிட 15.8 சதம் கூடுதல் மகசூல்.

பருவம்: ஆடி, புரட்டாசி மற்றும் தை. பயிரிட உகந்த பகுதிகள்: கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும்.

சிறப்பியல்புகள்: சரியாத, உதிராத ஒருசேர பூக்கும் திறன், மஞ்சள் தேமல் நோய் மற்றும் சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. 21.1 சதம் புரதச்சத்து கொண்டது.

வீரிய ஒட்டு சோளம் கோ-5: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள மற்றுமொரு வீரிய ஒட்டு ரகம் இது. ஐ.சி.எஸ்.ஏ.51, டி.என்.எஸ்.30 ஆகிய ரகங்களிலிருந்து தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 95-100 நாட்கள்.

மகசூல்: மானாவாரியில் ஒரு எக்டருக்கு குறைந்தபட்சம் 2759 கிலோ. அதிகபட்சம் 5060 கிலோ தானியமும், குறைந்தபட்சம் 7563 கிலோ, அதிகபட்சம் 9680 கிலோ உலர் தட்டையும் கொடுக்கவல்லது.

இறவையில் ஒரு எக்டருக்கு குறைந்தபட்சம் 4338 கிலோ, அதிகபட்சம் 6528 கிலோ தானியமும், குறைந்தபட்சம் 10,548 கிலோ, அதிகபட்சம் 13,470 கிலோ உலர்தட்டையும் கொடுக்கவல்லது. எம்.எஸ்.எச்.51 ரகத்தைவிட கூடுதல் விளைச்சல்.

பயிரிட உகந்த பருவம்: ஆடி, புரட்டாசி மற்றும் தை.

பயிரிட உகந்த பகுதிகள்: சோளம் விளையும் அனைத்து பகுதிகளும்.

சிறப்பியல்புகள்: தானியம் மற்றும் தீவனத்துக்கேற்ற ஒட்டுரகம், குறைந்த வயது, சாயாத தன்மை, அதிக செரிமானத்தன்மை கொண்ட தட்டை, சற்றே விரிந்த கதிர்களுடன் வெண்முத்து தானியங்கள், குறைந்த ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்டது.


வீரிய ஒட்டு கம்பு கோ-9: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சென்ற மாதம் (ஆகஸ்ட் 22, 2011) வெளியிட்டுள்ள இந்த வீரிய ஒட்டு ரகம், மகசூலாக இறவையில் ஒரு எக்டருக்கு குறைந்தபட்சம் 3728 கிலோ, அதிகபட்சம் 4,950 கிலோ, மானாவாரியில் ஒரு எக்டருக்கு குறைந்த பட்சம் 2707 கிலோ, அதிகபட்சம் 4950 கிலோ கொடுக்கவல்லது. எக்ஸ் 7 மற்றும் என்.எச்.7 ரகங்களைவிட 19 சதம் கூடுதல் விளைச்சல்.

பயிரிட உகந்த பருவம்: இறவைக்கு சித்திரை, மாசி ஆகிய பட்டங்கள். மானாவாரிக்கு ஆடி, புரட்டாசி ஆகிய பட்டங்கள். ஐ.சி.எம்.ஏ. 93111ஏ, பி.டி. 6029-30 ஆகிய ரகங்களிலிருந்து தேர்வு செய்து உருவாக்கப்பட்டது.

பயிரிட உகந்த பகுதிகள்: கம்பு விளையும் அனைத்து பகுதிகளும்.

சிறப்பியல்புகள்: அதிக விளைச்சல், சராசரியாக 4-6 தூர்கள், அடர்த்தியான கதிர் மற்றும் பெரிய தானியங்கள், அதிக இரும்புச்சத்து, அடிச்சாம்பல் மற்றும் துரு நோய்களுக்கு அதிக எதிர்ப்புத்திறன் கொண்டது.

கவனிக்க: புதிதாக வெளியிட்டுள்ளதை வாங்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளவும். தொடர்புக்கு: ஆராய்ச்சி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

போன்: 0422-243 1222.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us