
பட்டுப்புழுவிற்கு ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்
பால் நோய் நிர்வாகம்: த.வே.ப.க. செரிதூள் படுக்கைக்கிருமி நாசினி - 4 கிலோ/ 100 முட்டைத் தொகுதிக்கு; தாவர உட்கூறு தெளிப்பு (0.1 சதவீதம்) - 3ம் பருவ புழுவிற்கு.
பிளாச்சரி நிர்வாகம்: க்ளோரம் பெனிக்கல் 0.05 சதம்; மூன்றாம், நான்காம், ஐந்தாம் பருவ புழுக்களின் மீது தெளித்தல்.
ஊசி ஈ நிர்வாகம்: கதவு, சன்னல்களில் வலை அடைத்தல்; ஊசி சைடு 5லி/100 முட்டைத் தொகுதிக்கு - மூன்றாம், நான்காம், ஐந்தாம் பருவ புழுக்களின் மீது தெளித்தல்; நீசோலிங்ஸ் தைம்ஸ் ஒட்டுண்ணியை 1 லட்சம்/100 முட்டைத் தொகுதிகள் என்ற அளவில் நான்காம், ஐந்தாம் பருவ புழுக்கள், பட்டுக்கூடு அறுவடைக்குப்பின் தெளித்தல்; அசிபர் கவர்ச்சி பொறி (25 மிலி/லிட்டர் நீரில்) 3ம் பருவத்திலிருந்து வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல்.
நன்மைகள்: சுத்திகரிக்கப்பட்ட பட்டுக்கூடு விளைச்சல்; கோயம்புத்தூர் மாவட்டம் 22 சதம், ஈரோடு மாவட்டம் - 49 சதம். மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், பட்டுப்புழுவியல் துறை, பயிர் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.
போன்: 0422-661 1296.
குலைகளிலிருந்து பாக்கு பிரித்தெடுக்கும் இயந்திரம்: பாக்கு சாகுபடியில் குறிப்பாக அறுவடை காலத்தில் ஆள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பாக்கு மரத்திலிருந்து குலைகளை அறுவடை செய்தவுடன் குலைகளிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பது ஒரு கடினமான வேலை. எனவே பணியாளர்களின் வேலைப்பளுவைக் குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வண்ணம் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பண்ணை இயந்திரவியல் துறையில் செய்யப்படும் பணி வேளாண் தொழில் சூழலாய்வு மற்றும் பாதுகாப்புடன் கூடிய 'குலையிலிருந்து பாக்கு பிரித்தெடுக்கும் இயந்திரம்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் மூன்று குதிரைத்திறன் கொண்ட பெட்ரோல், மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் இன்ஜின் அல்லது மின்சார மோட்டார், பாக்கு பிரித்தெடுப்பதற்கான உருளை, உட்செலுத்தி, சல்லடை போன்ற பாகங்கள் உள்ளன. எளிதாக இழுத்துச் செல்வதற்கு இரு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் விலை ரூ.20,000/- (இன்ஜின் அல்லது மின்மோட்டார் நீங்கலாக).
பச்சைப்பாக்கு, பழுப்பாக்குகளை குலையிலிருந்து பிரித்தெடுக்க ஏற்றது. ஒரு மணி நேரத்தில் சுமார் 650 முதல் 950 கிலோ வரை பாக்குகளைப் பிரிக்க இயலும். கருவி வாங்குவதற்கு அணுக வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சி மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003; போன்: 0422-661 1204, 245 7576.
முந்திரியில் அடர் நடவு முறை: 5 x 4 மீட்டரில் முந்திரி ஒட்டுக்கன்றுகளை நடுதல்; ஒரு எக்டருக்கு 500 கன்றுகள் (பொதுவான நடவு முறையில் 7 x 7 மீட்டர் இடைவெளியில் 200 கன்றுகள் / எக்டர்) உரப்பரிந்துரை - 225:75:75 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து/எக்டர்; மரப்பராமரிப்பு தவறாமல் வருடந்தோறும் கவாத்து செய்தல் நன்மைகள்: அதிக விளைச்சல்; 3250 கிலோ முந்திரி/எக்டர், நிகரலாபம் -6ம் ஆண்டு முதல் வருடத்திற்கு ரூ.68,876.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

