
சேமிப்பு தானியங்களில் பூச்சி, முட்டைகளை நீக்கும் கருவி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை உருவாக்கி உள்ளது. இக்கருவி 3 முக்கிய பகுதிகளைக் கொண்டது. தானிய உள்வாயில், பூச்சிகளைத் தனியாக சேகரிக்கும் அமைப்புடன் கூடிய 'பூச்சிகளை அகற்றும் பகுதி', சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை சேகரிக்கும் தனி பகுதி (தானிய வெளிவாயில்) என மூன்று பகுதிகளைக் கொண்டது. இக்கருவியை கையினால் எளிதாக இயக்கலாம். இக்கருவியைக் கொண்டு 5 முதல் 10 நிமிடங்களுக்கு 5-10 கிலோ தானியங்களைப் பூச்சிகளிடமிருந்து சுத்தம் செய்ய முடியும். இதனை தேவைக்கேற்ப மோட்டார் பொருத்தியும் பயன்படுத்தலாம். தொடர்புக்கு: ச.மோகன், பேராசிரியர், பூச்சியியல் துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. மொபைல்: 94884 58006.
இனக்கவர்ச்சிப் பொறி தொழில் நுட்பத்தின் மூலம் நெல் குருத்துப்பூச்சி கட்டுப்பாடு: இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிலையம் (ஐ.ஐ.சி.டி) மூலம் தயாரிக்கப்பட்ட இனக்கவர்ச்சி மூலப்பொருட்களைக் கொண்டு த.வே.ப.க. இனக்கவர்ச்சி குப்பி கண்டறியப்பட்டுள்ளது.
நன்மைகள்: குருத்துப்பூச்சியை மட்டும் கவர்ந்து அழிக்க வல்லது. நெல் வயலின் சுற்றுப்புற சூழலுக்கோ உயிர் பெருக்கத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்து வதில்லை. எளிய முறையில் கையாளலாம். மேலும் இதன் வேதிக்கூறுகள் நெற்பயிருக்கோ மற்ற உயிர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
பொருளாதாரம்: 3 மி.கிராம் குப்பி ஒன்றின் விலை ரூ.10/-. 5 மி.கிராம் குப்பியின் விலை ரூ.15/-. இனக்கவர்ச்சிப் பொறி ஒன்றின் விலை ரூ.25/-. பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிய எக்டர் ஒன்றுக்கு ஆரம்ப முதலீடாக ரூ.200/- தேவைப்படும். (8 இனக் கவர்ச்சிப்பொறி/ எக்டர்) இனக்கவர்ச்சி குப்பியை 21 நாள் இடைவெளியில் 3 முறை மாற்றுவதற்கு மேலும் ரூ.240/- செலவாகும். பூச்சியைக் கவர்ந்து அழிப்பதற்கு எக்டர் ஒன்றுக்கு ஆரம்ப முதலீடாக ரூ.800/- தேவைப்படும் (20 இனக்கவர்ச்சிப்பொறி/ எக்டர்). இனக்கவர்ச்சி குப்பியை 21 நாள் இடைவெளியில் 3 முறை மாற்றுவதற்கு மேலும் ரூ.900 தேவைப்படும்.
கச்சோளம் கிழங்கு: சமிலேப்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 250 ஏக்கரில் பயிரிடப்படும் கச்சோளம் (kaempferi, galanga) தேவைப்படுகிறது. பயிரிட விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் அணுக வேண்டிய முகவரி: டாக்டர் ஜி.முத்துராமன், பிரின்சிபல் சயின்டிஸ்ட், சமி லேப்ஸ் லிமிடெட், 19/1 மற்றும் 19/2, முதல் மெயின், 2வது பேஸ், பீன்யா இண்டஸ்ட்ரியல் ஏரியா, பெங்களூரு-560 058. (Dr.G.Muthuraman, Principal Scientist, Sami Labs Limited, 19/1 & 19/2, I Main, II Phase, Peenya Industrial Area, Bangaluru560 058)
மொபைல்: 0 96323 72130, 0 97509 40564.
கரும்பைத் தாக்கும் வெள்ளைக் கம்பள அசுவினி கடந்த சில ஆண்டுகளாக கரும்புப் பயிரைத் தாக்கி, அதிக சேதத்தை விளைவித்தது ஒரு பூச்சி.?இந்த பூச்சியின் அட்டகாசம் அதிகமானால் அதைக்கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டதுதான் 'டைபா எபிடிவோரா' இரைவிழுங்கி. மேலும் விபரங்களுக்கு: முனைவர் கி.மனோகரன், பேராசிரியர் (பூச்சியியல்), விரிவாக்கக் கல்வி இயக்ககம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003.
மொபைல்: 98420 40335.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

