sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : ஜன 18, 2012

Google News

PUBLISHED ON : ஜன 18, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரங்குகளால் ஏலப்பயிர் நாசம்: ஏலக்காடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதில் குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குரங்குகள் பொதுவாக ஏலச்செடிகளின் கீழ்ப்பகுதிகளையே தாக்கி தண்டுப்பகுதியில் காணப்படும் சாற்றை உறிஞ்சுகின்றன. தென்னிந்திய காடுகளில் இரண்டு வகையான குரங்குகள் காணப்படுகின்றன.

ஒன்று நீளவால் லாங்கூர்கள். மற்றொன்று தடித்த கால்களும் சிவந்த முகமும் கொண்ட மக்காக் எனப்படும் வகையாகும். லாங்கூர்களில் மட்டும் 3 வகைகள் உள்ளன. லாங்கூர்கள் பொதுவாக அடர் வளர் பகுதிகளில் மட்டும் காணப்படும். மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதை அவை விரும்புவதில்லை. ஆனால் மற்ற வகையோ காடுகளில் மட்டும் அல்லாது கிராமப் பகுதிகளுக்கும் வந்து ஊறு விளைவிக்கும் குணமுடையவை. இவை திருட்டுத்தனம் கொண்டவை. இவற்றுள் ஒரு வலிமையான தலைவன் உண்டு. இவைகள் கூட்டங்களாகவே காணப்படும். பகலில் மட்டும் சேட்டைகளைச் செய்யும் குரங்குகள் இரவில் தனிமையான உயரமான மரத்தில் சென்று ஓய்வெடுக்கும் பழக்கம் கொண்டவை.

காலைப்பொழுது வரும்போது தலைமைக்குரங்கு ஒரு சில சிப்பாய்களோடு தனது வேட்டை யாடும் பகுதிகளை முதலில் ஒரு சர்வே எடுக்கும். பின் அது தனது இரு கால்களால் எழுந்து நிற்கும். இது ஒரு சங்கேதக் குறியீடு. இதைக் கண்டவுடன் மற்ற அனைத்துக் குரங்குகளும் தனது கைவரிசையைக் காட்டத் துவங்கும். கண்களில் கண்டவற்றை எல்லாம் சூறையாடத் தொடங்கும். யாராவது துரத்தினால் வேகமாக ஓடிச்சென்றுவி டும். பின்னர் மீண்டும் வந்து தனது வேலைகளைத் தொடங்கும்.

குரங்கின் பாதிப்பிற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. (1) தொடர்ச்சியான அபரிமிதமான காடுகள் அழிப்பு, (2) சாலையோர மரங்கள் வெட்டப்படுதல், (3) குரங்குகளைக் கடவுள் அவதாரமாக பார்க்கும் மக்கள் நம்பிக்கை.

இவற்றை விரட்டுவதோ, வெடி வைத்து பலத்த சத்தம் எழுப்பவோ, உண்டிவில் வைத்தோ, துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தியோ காட்டுக்குள் கொண்டுவர இயலும். தீர்த்தஹள்ளி தாலுகாவில் விவசாயிகள் ஏலத்தின் கீழ்ப்பகுதியை நைலான் வலை கொண்டு மூடுவதன் மூலம் குரங்குகளின் பாதிப்பைத் தவிர்க்கின்றனர். இமாசலப் பிரதேச அரசாங்கம் சோற்றுக்கற்றாழை மூலம் குரங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளது. சோற்றுக் கற்றாழை குரங்கின் தாக்குதலுக்கு உட்படாது. எனவே அந்த அரசாங்கம் சோற்றுக்கற்றாழை விதைக் கிழங்குகளை வேண்டிய அளவு விவசாயிகளுக்கு கொடுத்து உதவுகிறது. (தகவல்: க.கனகதிலீபன், முதுநிலைக் கள அதிகாரி, ஸ்பைசஸ் போர்டு, கோவை).

தக்காளி வீரிய ஒட்டு (எப்1 ஹைபிரிடு) ரகங்கள்: சின்ஜெண்டா வழங்கும் (1) டிஓ 1988 (TO 1988) எந்த மழையிலும் பழங்கள் வெடிப்பதில்லை. (2) ஹீம் சோனா - பழம் கல்லு மாதிரி கெட்டியாக இருக்கும். (3) நிருபம் ஆகியவை அடை மழைக்குப் பின்னும் மறுதாம்பிலும் காய்த்துக் கொட்டும். தொடர்புக்கு: மண்டல அலுவலகம், சின்ஜெண்டா இந்தியா லிமிடெட், விதைப்பிரிவு, 250ஏ, கண்ணப்ப நகர், ரத்தினபுரி ரோடு, சங்கனூர் மெயின்ரோடு, கோயம்புத்தூர்-641 027. (Syngenta India Ltd, Seeds Division, 250A,?Kannappa Nagar, Ratinapuri Road, Sanganur Main Road, Coimbatore 641 027) 94421 13759, 94422 26870, 94422 14885.

பண்ணைக்கழிவுகளை பயனுள்ள இயற்கை உரமாக்கிட உதவும் ஒரு சிறந்த சாதனம் - Tractor Operates (PTO Driven) Farm Waste Saredder பண்ணைக் கழிவுகளை பொடிப்பொடியாக்கும் சாதனம்.

தயாரிப்பாளர்கள் (1) ஜெய் இந்திரா அக்ரோ இன்ஜினியரிங், உதவிபாளையம், சின்ன நெகமம் அஞ்சல், பொள்ளாச்சி, கோவை.

அங்கீகரிக்கப் பட்ட விநியோகஸ்தர்கள் 'ஹிமாலயா இன்னோவேஷன்ஸ், 5/6சி, முதல் தளம், சக்தி கிராஸ், எண்.2, காந்திபுரம், கோயம்புத்தூர்-641 012. போன்: 0422-248 0218, 99429 88218, 99429 88318.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us