/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேர்க்கடலை இலை உண்ணும் புழுவை கட்டுப்படுத்த கரைசல்
/
வேர்க்கடலை இலை உண்ணும் புழுவை கட்டுப்படுத்த கரைசல்
வேர்க்கடலை இலை உண்ணும் புழுவை கட்டுப்படுத்த கரைசல்
வேர்க்கடலை இலை உண்ணும் புழுவை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : ஜன 28, 2026

வேர்க்கடலை இலை உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
வேர்க்கடலை சாகு படியில், இலை தின்னும் புழுக்களின் தாக்குதல் அதிகரிக்கும் போது, செடிகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். இது, இரவு நேரங்களில் அதிகமான வேர்க்கடலை செடிகளை தாக்குகிறது.
குறிப்பாக, வேர்க் கடலை செடிகளில் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, முட்டை இட்டு புழுக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால், வேர்க்கடலை மகசூல் வெகுவாக பாதிக்கும்.
இதை தவிர்க்க, வேர்க் கடலை விதைக்கும் நிலத்தை ஆழமாக உழவு செய்து மண்ணில் இருக்கும் கூட்டு புழுக்களையும், புழுக்களையும் அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கிராம் பேசில்லஸ் துரிஞ்சியன் மருந்தை எடுத்து, 200 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும், 5 மில்லி லிட்டர் வேப்பெண்ணெயுடன் 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். இவ்வாறு கரைசலை தெளிக்கும் போது, இலையை உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேர்க்கடலை சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டவும் வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா 97910 15355.

