/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெற்பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த கரைசல்
/
நெற்பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : ஜூலை 09, 2025

நெற்பயிரை தாக்கும், 'துங்ரோ' என அழைக்கப்படும் நச்சுயிரி நோயைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
'துங்ரோ' என்பது, நெல்லில் பரவும் நச்சுயிரி நோயாகும். இது, பச்சை இலை தத்து பூச்சிகளால் பரவும். இது தாக்கினால், நெற்பயிர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
நெற்பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நெல் மணிகள் வருவதை தடை செய்யும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க, நோய் தாக்குதல் இன்றி காணப்படும் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.
என்.பி.கே., சத்துக்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை சரியான அளவில் அளிக்க வேண்டும். வரப்புகளை களை புல் இன்றி துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி அமைத்து, தத்து பூச்சிகளை அழிக்கலாம். இதில், 120 மில்லி இமிடாகுளோபிரிட் மற்றும் 10 கிலோ பிப்ரோன் ஆகிய ஏதேனும் ஒரு மருந்தை200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -முனைவர் செ.சுதாஷா,.
97910 15355.