/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கரைசல்
/
மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கரைசல்
மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கரைசல்
மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : ஜூன் 11, 2025

மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
மாங்கொட்டையை தாக்கும் புழுக்கள் மஞ்சள் நிறத்திலும், தலை கருமை நிறத்திலும் இருக்கும்.
இது, ஒரு வாரத்திற்குள் முட்டையிடும். ஒரு புழு நாள் ஒன்றிற்கு 15 முட்டைகள் இடும்.
கூட்டுப்புழுக்களாக வளரும் தன்மை உடையது. வளர்ந்த பின், கூண் வண்டுகளாக மாறிவிடும். இதை கட்டுப்படுத்த, பூச்சி மருந்தினை நேரடியாக மரங்களின் அடியில் தெளிக்க வேண்டும்.
மாங்கொட்டையை தாக்கும் புழுக்கள், முதலில் காய்களை தாக்குகின்றன. பின், மாம்பழங்களையும் தாக்குகின்றன. இதனால், மா மகசூலில் இழப்பு ஏற்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகளை முதல் தெளிப்பையும் 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டருக்கு, 1.5 கிராம் ஆசிபேட், ஒரு லிட்டருக்கு 2.5 லாம்டா சைஹாலோத்ரின் ஆகிய பூச்சி கொல்லி மருந்துகளை கலந்து, மா மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தெளிக்க வேண்டும்.
கூண் வண்டால் பாதிக்கப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை மண்ணெண்ணெயால் கழுவ வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மருந்தை, காய் பிடித்த பின், ஒன்றரை மாதத்தில் தெளிக்க வேண்டும்.
இதுபோல செய்தால் மாங்கொட்டையை தாக்கும் புழுக்களை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
திரூர்.
97910 15355.