தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த சில 'டிப்ஸ்!'

இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த சில 'டிப்ஸ்!'

இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த சில 'டிப்ஸ்!'


PUBLISHED ON : நவ 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலை சுருட்டு புழு தடுப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சி.பானுமதி கூறியதாவது:

சம்பா நெற்பயிரில், இலை சுருட்டு புழு தாக்குதல், நெல் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தழைச்சத்து அதிகமாக போடப்பட்ட வயல்கள், மர நிழல் படியும் வயல்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, தரை வண்டுகள், ஒட்டுண்ணிகள், குளவிகள், நீர்தாண்டி, நீர் மிதப்பான், தட்டான்கள், இடுக்கி வால் பூச்சிகள் ஆகிய நன்மை செய்யும் பூச்சிகளையும் மற்றும் சிலந்திகளையும் பாதுகாக்க வேண்டும்.

இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு, விளக்கு பொறி அமைக்க வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு, 400 மில்லி அசாடிராக்டின் அல்லது 400 மில்லி பெசில்லஸ் துரின்சியென்சிஸ் எதிர் உயிரி பாக்டீரியா உரத்தை, 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து, ஒட்டும் திரவத்தையும் சேர்த்து, நெற்பயிர் இலைகள் மீது தெளிக்க வேண்டும்.

இதுதவிர, 400 கிராம் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு; 50 கிராம் புளூபென்டிமைட்; 60 மில்லி குளோரான்ட்ரினிலிபுரோல் ஆகிய மருந்துகளில், ஏதேனும் ஒரு மருந்தினை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: சி.பானுமதி,

98848 76883.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us