/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஆண்டு முழுதும் முட்டை உற்பத்திக்கு சோனாலி ரக நாட்டுக்கோழி
/
ஆண்டு முழுதும் முட்டை உற்பத்திக்கு சோனாலி ரக நாட்டுக்கோழி
ஆண்டு முழுதும் முட்டை உற்பத்திக்கு சோனாலி ரக நாட்டுக்கோழி
ஆண்டு முழுதும் முட்டை உற்பத்திக்கு சோனாலி ரக நாட்டுக்கோழி
PUBLISHED ON : மார் 19, 2025

சோனாலி ரக நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த கால்நடை விவசாயி ஆர்.செல்வமணி கூறியதாவது:
பெருவிடை, சிறுவிடை, சோனாலி உள்ளிட்ட பல்வேறு விதமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறேன்.
இந்த நாட்டுக்கோழிகளை இறைச்சி விற்பனை மற்றும் முட்டை விற்பனைக்கு பயன்படுத்தி வருகிறேன்.
பெருவிடை, சிறுவிடைக்கோழிகள் ஐந்து கிலோ வரையில் எடை போடும். இந்த சோனாலி ரக நாட்டுக்கோழிமுட்டைக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும்.
குறிப்பாக, ஓராண்டு முழுதும் 248 முட்டைகள் போடும். சோனாலி ரக கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரிக்காது. இன்குபேட்டர் வாயிலாக கோழிக் குஞ்சுகளைஉற்பத்தி செய்து கொள்ளலாம்.
முட்டையாகவிற்பனை செய்தாலும் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
கோழி வளர்ப்பில், இறைச்சி மற்றும் முட்டை விற்பனை என, இருவிதங்களிலும் எடுத்துக் கொண்டாலும், அதிக எண்ணிக்கை கோழிகளை வளர்க்கும் போது தான் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
குறைந்த எண்ணிக்கையில் கோழிகளை வளர்த்தால், கோழி வளர்ப்பு வாயிலாக கிடைக்கும் வருவாய், பராமரிப்பு செலவிற்கே சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஆர். செல்வமணி,
73396 01644.