தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/இயற்கை உரம் பயன்படுத்தி தண்டுக்கீரை சாகுபடி

இயற்கை உரம் பயன்படுத்தி தண்டுக்கீரை சாகுபடி

இயற்கை உரம் பயன்படுத்தி தண்டுக்கீரை சாகுபடி


PUBLISHED ON : மார் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை உரம் பயன்படுத்தி தண்டுக்கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ. நடராஜன் கூறியதாவது:

பல வித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், இயற்கை உரங்களை பயன்படுத்தி தண்டு கீரை சாகுபடி செய்துள்ளேன்.

பொதுவாக, தண்டுக் கீரையை மேட்டுப்பாத்தி மற்றும் சமமான நிலங்களில் சாகுபடி செய்யலாம். மேட்டுப்பாத்தியில் தண்டுக்கீரை சாகுபடி செய்யும் போது தண்ணீர் குறைவாக இருந்தாலும், கீரை அறுவடை செய்யலாம்.

சமமான நிலத்தில் சாகுபடி செய்யும் போது, தண்ணீரை பாய்ச்சிய பின் தான் அறுவடை செய்ய முடியும்.

இரு விதமான நிலங்களிலும் தண்டுக்கீரை சாகுபடி செய்துள்ளேன். வீட்டு தேவைக்கு போக சந்தையில் விற்பனை செய்து விடுகிறேன். ரசாயனம் இன்றி விளைவிப்பதால் ஒரு கட்டு கீரை 30 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: ஏ.நடராஜன்,99439 06332.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us