/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தக்காளி அழுகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
/
தக்காளி அழுகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
PUBLISHED ON : ஜன 07, 2026

தக்காளி அழுகலை கட்டுப் படுத்தும் கரைசல் தெளிப்பது குறித்து, திருவள்ளூர் மாவட் டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:
தக்காளி சாகுபடியில், கால் சியம் பற்றாக்குறையால், அழு கல் நோய் தாக்கும். மேலும், மண்ணில் அமிலத்தன்மை சமநிலை இல்லாதபோது, தக் காளி பழங்களின் அடிப்பகுதி, கருப்பு நிறமாக மாறி அழுக துவங்கி விடும். இது, மகசூல் இழப்பு ஏற்படுத்துவதோடு, பழங்களின் தரமும் வெகுவாக பாதிக்கப்படும்.
இதை தவிர்க்க, கட்டாய மாக மண் பரிசோதனை செய்ய
வேண்டும். குறைந்த நீர் பாசனத்தை கையாள வேண் டும். 10 கிராம் கால்சியம் நைட்ரேட்டுடன், 1 லிட்டர் தண்ணீர் கலந்து, 15 நாட்க ளுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
மேலும், 5 கிராம் கால்சியம் குளோரைடை, 1 லிட்டர்தண் ணீரில் கலந்து, 15 நாட்களுக்கு இடைவெளியில் தெளிக்க வேண்டும். இந்த இரு விதமான கரைசலில், ஏதே னும் ஒரு கரைசலை பயன் படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355

