PUBLISHED ON : நவ 24, 2010

காட்டுக் கருவேல மரங்களின் விறகு மற்றும் கரிக்காக அம்மரங்களை வெட்டி பயன்படுத்துகின்றனர். அம்மரங்கள் சமீப காலமாக மின்சாரம் தயாரிக்க கொண்டு செல்லப்படுகிறது. அம்மாதிரி அவை வெட்டப்பட்டு தேவையான கட்டைகளை எடுத்துக்கொண்டு மீதி அம்மரத்தின் முள் கழிவுகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. அவ்வாறு யாருக்கும் பயன்படாமல் தீயிட்டுக் கொளுத்தாமல் மீண்டும் சக்தியாக மாற்ற வேண்டும் என முடிவெடுத்து ஒரு இயந்திரத்தை தயாரித்து உள்ளோம்.
இவ்வியந்திரத்தின் பயன்கள்:
* இதுவரை இம்முள் கழிவுகள் வேறு எந்த உபயோகத்திற்கும் எடுக்கப்படவில்லை. இந்த இயந்திரத்தின் மூலம் வருடத்திற்கு சுமார் 2,500 டன் கழிவுகள் மீண்டும் சக்தியாக மாற்றப்படுகிறது.
* தீயிட்டுஅழிப்பதால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. அதிலிருந்து முழுவதுமாக காற்றுமண்டலம் மாற்றப்படுகிறது.
* தினசரி ஒரு இயந்திரத்திற்கு 10 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்.
* கிராமப்புறத்தில் டிராக்டர் உள்ள விவசாயிகளின் வருமானம் கூடுகிறது.
* இதன்மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது.
* படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு பெருகுகிறது.
* வருடத்திற்கு சுமார் 50 கோடி அளவில் இம்மாவட்டத்தில் மட்டும் பொருளாதாரம் பெருகுகிறது.
* இக்கழிவுகள் மீண்டும் உபயோகத்திற்கு வருவதால் எரிசக்தி உபயோகப்படுத்தும் தொழிற்சாலைகள் மேலும் பெருக வாய்ப்புள்ளது.
* இதுபோல் மரவள்ளிக்கிழங்கு குச்சி, சவுக்கு கழிவுகள், மூங்கில் கழிவுகள் மற்றும் இதர மரக்கழிவுகள் இவற்றை அரைக்கவும், இந்த இயந்திரம் பயன்படும்.
இந்த இயந்திரத்தின் மூலம் அரைத்து வெளிவரும் குச்சிகள் மின்சாரம் தயாரிக்கவும், பேப்பர் மில், அரிசி ஆலை, சாயப்பட்டறைகள், உணவு விடுதிகள் மற்றும் அனைத்து பாய்லர் அடுப்புகளுக்கும் மிக சக்திவாய்ந்த எரிபொருளாக பயன்டுபடுத்தலாம்.
தொடர்புக்கு: ஐ.பன்னீர்செல்வம், கண்ணப்பன், 94433 23185, 93458 10555.
-கே.சத்தியபிரபா, உடுமலை.
