PUBLISHED ON : மே 22, 2013
கள்ளிக்குடி, வறட்சியை போக்க விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்துதர வோளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் உதவி இயக்குநர் அமுதன் கூறியதாவது:
கோடையில் பண்ணைக் குட்டைகள் அமைத்தால், மழைக் காலங்களில் நீர் சேமிக்க முடியும். ஆழ்துளை கிணறுகள், அடிகுழாய்கள் அருகில் அமைத்தால், நீர் ஊற்று கிடைக்கும். பண்ணைக் குட்டை நீரின் அளவை பொறுத்து, கட்லா போன்ற மீன் வகைகளை வளர்த்து உபரி வருமானம் பெறலாம்.
ஆடு, மாடுகளுக்கு குடிநீர் தேவையை போக்கலாம். குறைந்த நீரில் விளையும் சிறுதானிய பயிர்களை வறட்சி காலங்களில் பயிரிடலாம். கள்ளிக்குடி ஒன்றியம் மையிட்டான்பட்டியில், தேசிய ஊரக வேலை திட்டப் பயனாளிகளைக் கொண்டு பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுகிறது. விரும்பும் விவசாயிகள், போட்டோ சிட்டா, ரேஷன் கார்டுடன் வேளாண் விரிவாக்க மைய அலுவலரை அணுகலாம், என தெரிவித்துள்ளார்.