வறட்சியை தாக்குப்பிடிக்கும் சிறுதானிய சாகுபடிக்கு மானியம்
வறட்சியை தாக்குப்பிடிக்கும் சிறுதானிய சாகுபடிக்கு மானியம்
PUBLISHED ON : நவ 23, 2016

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோளம், கம்பு, சிறுதானியங்கள், மக்காச்சோளம் எக்டேருக்கு 4 ஆயிரம் ரூபாய். நுண்ணுாட்டச்சத்து கலவை விநியோகம் எக்டேருக்கு 500 ரூபாய் அல்லது 50 சதவிகிதம் மானியம் உண்டு. பயிறு வகை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 சதவிகிதம் டி.ஏ.பி., இலைவழி உரம் தெளிக்க எக்டேருக்கு 650 ரூபாய் அல்லது 50 சதவிகிதம்.
வரப்பில் பயிறு சாகுபடிக்கு எக்டேருக்கு 150 ரூபாய். தரமான விதை உற்பத்தி ஊக்கத்தொகை (15 ஆண்டுக்கு உட்பட்டது) மெட்ரிக் டன்னுக்கு 25 ஆயிரம் ரூபாய். வரிசை விதைப்பு பயிர், ஆழச்சால் அகலப்பாத்தி முறையில் பயிர் எண்ணிக்கை பராமரித்தல் எக்டேருக்கு 1000 ரூபாய் அல்லது 50 சதவிகிதம். விழிப்புணர்வு பயிற்சிக்கு 4000 ஆயிரம் ரூபாய் என மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மானியங்களை முழுமையாக பெற்று பயனடைய அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
