/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்
/
சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்
சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்
சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்
PUBLISHED ON : மே 15, 2019

தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு சாகுபடி யில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நெல், கரும்புக்கு அதிகளவு தண்ணீர் தேவை. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் நெல், கரும்பு சாகுபடி பெருமளவு நடக்காது. அதற்கு பதிலாக குறைந்த தண்ணீர் செலவில் பருத்தி, சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். கொங்கு மண்டலத்தில் சொட்டு நீர் தொழில்நுட்பத்தில் கரும்பு சாகுபடி நடக்கிறது. குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம் பட்டி உள்ளிட்ட பகுதிகள் நிலத்தடி நீர் வற்றிய அபாயகரமான பகுதியாக பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. இப்பகுதியில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்க தடை உள்ளது. எனினும் விவசாயிகள் சிலர் முன்பு அமைத்த ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
வாடிப்பட்டி அருகே கோம்பைக்காடு பகுதியில் தேனி மாவட்டம் வைகை ஆணை அருகே ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் சொட்டுநீர் தொழில்நுட்பத்தில் முதல் முறையாக கரும்பு சாகுபடி செய்கின்றனர். இங்கு 18 ஏக்கரில் கரும்பு பயிடப்பட்டுள்ளது. கரும்பு அறுவடைக்கு பின் சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர்.
பண்ணை ஊழியர் சின்ராஜ் கூறியதாவது: கோவை, ஈரோடு, தேனி, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட பகுதியில் ஆலைக்கு சொந்தமான நிலத்தில் சொட்டுநீர் மூலம் கரும்பு சாகுபடி நடக்கிறது. வாடிப்பட்டி கோம்பைக்காட்டில் 'கரும்பு ரகம் 671' எனும் ஆலைக்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை காலம் 11 மாதங்கள். தற்போது முதல் அறுவடை முடிந்து இரண்டாவது கரும்பு கட்டைகள் ஊன்றப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த நீரில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. வழக்கமான அடி உரம், மேல் உரம் வைப்பதாலும், தேவையான நீர் பயிருக்கு கொடுப்பதால் கரும்பு செழிமையாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆலைக்கு தேவையான கரும்பு உற்பத்தியை கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்து விளைவிக்கப்படுகிறது. குறைந்த தண்ணீர் செலவு; நிறைந்த பயிர் விளைச்சல் ஈட்டப்படுகிறது, என்றார். தொடர்புக்கு கரும்பு அலுவலர் விஜயகுமார், 98652 10530
-கா.சுப்பிரமணியன், மதுரை

