
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
மக்காச்சோளம் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் சிறந்த உணவு. 2018 ல் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் படைப்புழு தாக்குதலால் மிகுந்த சேதம் அடைந்தனர். படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் கோடை உழவின் போது நிலத்தின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்படுத்தப்படும். கோடை உழவு செய்யாவிட்டால், மழை நீர் சேகரிக்கப்படாமல் போவதுடன், பூச்சிகளின் தாக்குதல் அதிகம் காணப்படும். அமெரிக்கன் படைப்புழுவின் முட்டைகள், கூடுகள் அழிக்கப்படுவதுடன் மண்ணிற்கு அடியில் காணப்படும் பயிரை தாக்கும் கூட்டுப்புழக்கள் அழிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இம்மாதத்தில் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்.
தொடர்புக்கு 94420 29435.
- பி. குமாரவடிவேல்
வேளாண் இணை இயக்குனர், மதுரை

