sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

/

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி


PUBLISHED ON : ஆக 29, 2012

Google News

PUBLISHED ON : ஆக 29, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் 'நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி' தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.

கரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும். வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும். இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது. இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.

சில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும். இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. படத்தில் உள்ளவாறு இருக்கும் கருவியைக் கொண்டு இளங்கரும்புப் பயிரின் தாய்ப்பயிரை ஆட்களின் உதவியால் அறுத்துவிடலாம். இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம். நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம். அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.

அதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும். பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும். தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.

-கே.சத்தியபிரபா, உடுமலை.



தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மானியத்திட்டங்கள்:

நில மேம்பாட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு தேவைப்படும் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு விடுதல்: புல்டோசர் - வாடகை ரூ.755/ மணிக்கு, டிராக்டர் - வாடகை ரூ.300/- மணிக்கு, நெல் அறுவடை இயந்திரம் - வாடகை ரூ.825/மணிக்கு, சிறு பாசனத் திட்டம்: விவசாயிகளின் நிலங்களில் குழாய், கிணறு அமைத்தல்: கைத்துளைக் கருவி - வாடகை ரூ.30/- மீட்டருக்கு.

மழைநீர் சேமிப்புத் திட்டம்: விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை சேகரித்து மீன்வளர்ப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்துதல் - பண்ணைக்குட்டை அமைத்தல், கிராம ஊரணி அமைத்தல் - குட்டை ஒன்றுக்கு ரூ.54,000. ஊரணி ஒன்றுக்கு ரூ.1,75,000.

நீர்வளம் மற்றும் நிலவளத் திட்டம்: உத்தரகோசமங்கை, கிருதுமால் மற்றும் பரளையாறு உப வடிநிலப் பகுதிகள்: பண்ணைக்குட்டை அமைத்தல், பயனாளிகள் சங்கத்திற்கு இலவசமாக வேளாண் கருவிகள் வழங்குதல், சொட்டுநீர் / தெளிப்புநீர் பாசனம் - குட்டை ஒன்றுக்கு ரூ.45,000. கருவிகளுக்கு முழு மானியம் 100 சதவீத மானியம்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்/மத்திய சார்பு/திட்டம்: வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி, பண்ணை பணிகளை இயந்திர மயமாக்கி கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை தவிர்த்து சாகுபடி செலவினை குறைத்தல் - டிராக்டர் ஒன்றுக்கு ரூ.45,000 மானியம். பவர் டில்லர் - ரூ.45,000. ரோட்டவேட்டர் - ரூ.20,000. அறுவடை இயந்திரம் - ரூ.4,00,000. மருந்து தெளிப்பான் - ரூ.20,000. மினி டிராக்டர் - ரூ.1,25,000. களை எடுப்பான் - ரூ.50,000.

தொடக்க வேளாண்மை கடன்: கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் - விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவரத்தை அந்தந்த சங்கச் செயலாளரிடம் மனு அளிக்க வேண்டும் - 50 சதவீதம் மானியம்.

தகவல்: அந்தந்த மாவட்ட செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை)






      Dinamalar
      Follow us