sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பட்டுப்புழு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிகள்

/

பட்டுப்புழு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிகள்

பட்டுப்புழு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிகள்

பட்டுப்புழு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிகள்


PUBLISHED ON : நவ 26, 2014

Google News

PUBLISHED ON : நவ 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு அரசு சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ''அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம்'' சிறப்பாக செயல்படுகிறது. அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் மகசூல் மேம்படுத்தும் பயிற்சிகள், நோய்கள் கட்டுப்படுத்த பயிற்சிகள், பட்டுப்புழு வளர்ப்பு, முட்டை சேமிப்பு என பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிறுவனம் மத்திய அரசு பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து பெங்களூரு, மைசூருவிலும் உள்ள மத்திய பட்டு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு மைசூருவில் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பயிற்சிகள்: முசுக்கொட்டையில் ஒருங்கிணைந்த சத்து மற்றும் நோய் மேலாண்மை முறைகள் 6 நாட்கள், இளம் புழு வளர்ப்பு 8 நாட்கள், இளம் /முதிர் புழு வளர்ப்பு 35 நாட்கள், பூச்சி / நோய் மேலாண்மை 10 நாட்கள், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு 6 நாட்கள், கை கருவி மூலம் வேலைப்பளு குறைப்பு 6 நாட்கள், பட்டு முட்டை உற்பத்தி, பட்டுப்புழு வளர்ப்பை இயந்திரமயமாக்குதல் பயிற்சி.

முழு விபரங்களுக்கு : தமிழ்நாடு அரசு பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 - 225 628. H.O: சேலம் - 0427 - 229 61661.

இந்திய அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம், 5/1, Opp: க.ஐ.இ, மத்திய பட்டு வாரியம், 44, தளிரோடு ஓசூர்-635 110, கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 - 220 520, 522 043. Ecgrc@eth.net.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையங்கள், சோதனை சான்று நிலையம், ஆலோசனை வழங்கும் நிலையங்கள் பற்றி அறிய www.seri.ap.gov.in, www.tnsericulture. gov.in, www.agritech.tnau.ac.in ஆகிய வலைத்தளங்களை பாருங்கள்.

தொழில்நுட்பம் ஆலோசனை பெற பேராசிரியர், பட்டுப்புழு வளர்ப்பு துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயமுத்தூர்-641 003. போன்: 0422 - 661 1296, வலை : www.tnau.ac.in அணுகலாம்.

- எம்.ஞானசேகர்,

தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்

93807 55629






      Dinamalar
      Follow us