sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

திப்பிலி - மருத்துவ பயிர்

/

திப்பிலி - மருத்துவ பயிர்

திப்பிலி - மருத்துவ பயிர்

திப்பிலி - மருத்துவ பயிர்


PUBLISHED ON : நவ 09, 2011

Google News

PUBLISHED ON : நவ 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளானிக்கரா 1 (விஸ்வம் திப்பிலி) என்ற உயர் விளைச்சல் திப்பிலி ரகம் கேரள மாநிலத்திலிருந்து 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்காடு பி.எல்.9 என்ற தேர்வு தமிழகத்தில் சாகுபடி செய்வதற்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்த ரகத்தேர்வு முன்கூட்டியே காய்த்து அதிகக் காய்களை மகசூலாகத் தரும் தன்மை உடையது.

அதிக அளவு காற்றில் ஈரத்தன்மை உள்ள தாழ்வான மலைச்சரிவுகளில் பயிர் செய்ய ஏற்றது. குறைந்தவு 60 சதம் ஈரத்தன்மை இருப்பது அவசியம். 30-32 டிகிரி செல்சியஸ் சாகுபடி செய்ய இயலாது. அதிகமான தட்பவெப்பநிலையைக் கொண்ட இடங்களில் சாகுபடி செய்ய இயலாது. சராசரி ஆண்டு மழையவு 150 செ.மீ.க்கும் மேல் இருப்பது நல்லது. தமிழகத்தில் 1250 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகள் அதாவது கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளான சேர்வராயன், கொல்லிமலை மற்றும் கல்ராயன் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.

மண்ணை நன்றாக உழுது ஒரு எக்டருக்கு 20-25 டன் தொழு எரு இட்டுப் பண்படுத்த வேண்டும். மலைப்பகுதிகளில் சோலை மண் உள்ள இடங்களில் 10 டன் தொழு எரு இட்டால் போதுமானது. மலைப்பகுதிகளில் 2மீ து 2 மீ அளவிலான பாத்திகளில் செடிகளை நடவு செய்யலாம். சமவெளிப் பகுதிகளில் ஒரு எக்டருக்கு 25 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்திய பிறகு மூன்று அடி இடைவெளியில் பார்களை அமைத்து அவற்றின் பக்கவாட்டில் செடிகளை நடலாம்.

திப்பிலியை ஓரிரு கணுக்களுடைய தண்டுகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். கணுக்கள் எளிதாக வேர்பிடிக்கும் தன்மை உடையவை. திப்பிலிக் கொடிகளின் நுனி மற்றும் நடுப் பாகத்திலிருந்து ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால் 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும். வேர்பிடித்த தண்டுகளை நடவிற்கு பயன்படுத்தலாம்.

மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சமவெளிப்பகுதிகளில் தோப்புகளில் வாய்க்கால் ஓரங்களில் செடிகளை நட்டும் பராமரிக்கலாம். தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது வாரம் ஒருமுறை நீர்ப் பாசனம் அளிக்க வேண்டும்.

நிழல் பராமரிப்பு: திப்பிலி மருந்துச் செடிகளுக்கு 60 சதவீதம் நிழல் இருப்பது அவசியம். நிழல் தரும் மரங்களான சவுக்கு, கல்யாண முருங்கை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை பரவலாக உள்ள கிளைகளைக் களைதல் வேண்டும். சீரான வெளிச்சமும் அதே சமயம் பிற்பகல் நேரங்களில் ஓரளவு நிழலும் இருக்கின்ற வகையில் நிழல் மரங்களின் கிளைகளை வெட்டிவிட வேண்டும். சமவெளிப்பகுதியில் தென்னந்தோப்பு அல்லது பாக்குத் தோப்புகளில் திப்பிலி செடிகளுக்கு பிற்பகல் நேரங்களில் நிழல் இருக்கின்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். அதிகளவு வெப்பம் இருந்தால் சாழிக் கன்றுகளை நட்டு செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம்.

மகசூல்: முதல் ஆண்டில் 750 கிலோ உலர்ந்த காய்களும் இரண்டாவது ஆண்டிலிருந்து சராசரியாக 1500 கிலோ காய்களும் மகசூலாகக் கிடைக்கும். வேர்க ளுக்காக பயிர் செய்தால் எக்டரில் செடிகளை நட்ட இரண்டாவது ஆண்டில் 5 முதல் 7 டன் வேர்களும் மூன்றாவது ஆண்டில் 6 முதல் 8 டன் வேர்களும் உலர்ந்த அடிப்படையில் கிடைக்கும்.

ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக்,
தாராபுரம்-638 657,
மொபைல்: 89037 57427.






      Dinamalar
      Follow us