தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : ஆக 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எள் சாகுபடி நுட்பங்கள்: ஆடிப்பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. சாகுபடிக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய, பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட இரகங்கள் அனைத்தும் 80 முதல் 85 நாட்கள் வயதுடையவை. மானாவாரியில் ஒரு எக்டருக்கு 600 முதல் 750 கிலோ வரை விளைச்சலை தரவல்லது.

எள் சாகுபடிக்கு சான்று பெற்ற விதைகளையே உபயோகிக்க வேண்டும். இனத்தூய்மையுள்ள நன்கு திரட்சியான விதைகளே சிறந்தது. சுமார் 90 சதவீதம் முளைப்புத்திறன் உள்ள விதைகளையே உபயோகிக்க வேண்டும். இரண்டு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம் என்ற அளவில் மருந்தைக் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். அல்லது 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

தழைச்சத்து (25%) 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம் / எக்டர்), 3 பாக்கெட் (600 கிராம் / எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பாக்கெட் அசோபாஸ் (1200 கிராம் / எக்டர்) மூலம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிருக்கு கிடைக்கின்றது. எள்ளுக்கு 'ஏழு உழவு' என்பது பழமொழி. எனவே 5 முறையாவது நன்கு புழுதிட உழுது, நிலத்தை சீர்செய்ய வேண்டும்.

கோ.1, பையூர் 1 விஆர்ஐ (எஸ்.வி) 2 மற்றும் டிஎம்வி. (எஸ்.வி) 7 ஆகிய விதைகளைப் பயன்படுத்தலாம். இறவையில் சாகுபடி செய்ய 10 முதல் 20 சதுர மீட்டர் பரப்பில் பாத்திகள் அமைத்து விதைக்க வேண்டும். விதைக்கும் முன் 5 கிலோ விதையுடன் 20 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும். விதைத்த 30வது நாளில் ஒரு அடி இடைவெளி விட்டு பயிரை களைக்க வேண்டும்.

மானாவாரியில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை எக்டருக்கு 23:13:13 கிலோ என்ற அளவில் இட வேண்டும். இறவைப் பயிருக்கு எக்டருக்கு 30:23:23 கிலோ என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும். மாங்கனீசு சல்பேட் நுண்ணூட்டத்தின் ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் சீராகத் தூவி விட வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்த 'ப்ளூக்ளோரலின்' அல்லது பென்டிமீத்தாலின் எக்டருக்கு 2 லிட்டர் வீதம் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்தப் பின் நீர் பாய்ச்ச வேண்டும்.

மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை : இவைகளில் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிகளவில் காணப்படும். துத்தநாக குறைபாட்டால் பயிரின் இனங்குருத்துக்கள் வெளிறி காணப்படும். முதிர்ந்த இலையின் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள்இலைகள் காணப்படும். இந்தக் குறையைப் போக்க ஏக்கருக்கு 8 கிலோ துத்தநாக சல்பேட் சத்தை அடியுரமாக இடவேண்டும். பயிர்களில் மக்னீசியம் குறைபாடு காணப்பட்டால் அடி இலைகளின் விளிம்புகளுக்கும், நரம்புகளுக்கும் இடையே வெளிறிக் காணப்படும். இரும்புச்சத்து பற்றாக்குறையால் பயிர் முழுவதும் வெளிறியது போல் காணப்படும். இக்குறைகளைப் போக்க நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 3 கிலோ அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மேலாகத் தூவி விட வேண்டும்.

பயிரின் 50 சதவீதம் பூக்கும் பருவத்தில் 0.5 சதம் துத்தநாக சல்பேட் மற்றும் 0.2 சதம் பேளிக் அமில கரைசலைத் தெளிப்பதன் மூலம் விதைப்பிடிப்பு மேம்படும். அல்லது 0.5 சதம் அக்ரோமின் நுண்ணூட்ட சத்தை பெண் பூ பூக்கும் பருவம் மற்றும் விதை முதிர்ச்சி பருவத்தில் தெளிக்க வேண்டும். பெண் பூ பூக்கும் பருவம் மற்றும் விதைகள் முதிரத் தொடங்கும் பருவம் 0.5 சதம் நியூட்ரிகோல்டு தெளித்தல் அல்லது 5 சதம் முளையிட்ட தட்டைப்பயிறு பால் தெளிக்க வேண்டும்.

ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கும் பாலூர்-1 பலா : தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 500 எக்டரில் பலா சாகுபடியாகிறது. 'பண்ருட்டி' பலா என்று தனியாக ரகம் கிடையாது. பண்ருட்டி பலா சிறப்பாக இருப்பதற்கு காரணம் செம்மண் அதிகமான வெப்பம் கடல் காற்றின் ஈரப்பதம் ஆகியவை தான். இந்தப்பகுதியில் கிடைக்கும் மகசூல் அளவு, சுளைகளின் அளவு, சுவை போன்றவை மற்ற பகுதிகளை விட மாறுபட்டவை. தவிர இப்பகுதி மரங்களில் 5 முதல் 7 ஆண்டுகள் கழித்துத் தான் மகசூல் கிடைக்கிறது. பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டதில் 3 ஆண்டுகளில் காய்க்கும் பாலூர்-1 மற்றும் பாலூர்-2 ஆகிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலூர்-1 ஆண்டுக்கு 2 முறையும், பாலூர்-2 ஆண்டுக்கு ஒரு முறையும் காய்க்கும். 8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சராசரியாக ஒவ்வொரு மரத்தில் இருந்தும் 100 காய்கள் அறுவடை செய்யலாம். செடிகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : முனைவர் அனிசா ராணி, தொலைபேசி- 97889 28254, பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம்.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us