sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வான்கோழி வளர்ப்பு

/

வான்கோழி வளர்ப்பு

வான்கோழி வளர்ப்பு

வான்கோழி வளர்ப்பு


PUBLISHED ON : அக் 26, 2011

Google News

PUBLISHED ON : அக் 26, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்புமுறைகளை கடைபிடிக்கலாம்.

1. புறக்கடை வளர்ப்பு, 2. மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, 3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, 4. கம்பிவலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்.

இனங்கள்: அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்: இவ்வகை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெட்டைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை, பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடம்இருந்து பிரித்து வளர்க்கப் பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.

அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி: இந்த ரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12-18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 - 9 கிலோ எடை வரையிலும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 - 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.

பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை: அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப் பட்டன. இவ்வகை வான் கோழிகள் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும் வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.

வான்கோழித் தீவனப் பராமரிப்பு: வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெறமுடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடை கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாட்களுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5 - 3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு: தண்ணீர், மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்).

ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான் கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்ற கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.

-ஆர்.ஜி.ரீஹானா, தாராபுரம், மொபைல்: 89037 57427.






      Dinamalar
      Follow us