/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வைக்கோலை பதப்படுத்த யூரியா கரைசல்
/
வைக்கோலை பதப்படுத்த யூரியா கரைசல்
PUBLISHED ON : அக் 02, 2024

செறிவூட்டப்பட்ட வைக்கோல் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
ஆடு, மாடு வளர்க்கும் கால்நடை வளர்ப்போர், உலர் தீவனம் சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
வைக்கோல் கட்டு மற்றும் உலர்ந்த வைக்கோல் சேமிக்காததால், வைக்கோல் மூன்று மாதங்களில், பூஞ்சாணம் பிடித்து விடுகிறது.
பருவ மழை மற்றும் கோடை காலங்களில், தீவன தட்டுப்பாடு ஏற்படும். இதை தவிர்க்க, ஈர வைக்கோலை உலர வைத்து உருண்டை மற்றும் பெட்டி வடிவில் சேமிக்கலாம்.
மேலும், 3 சதவீத அம்மோனியா கரைசலை தெளித்து, வைக்கோலை செறிவூட்டும் போது, அதில் இருக்கும் நைட்ரஜன் அளவு அதிகரிக்கும்.
நுண்ணுயிரிகளின் ஆற்றல், கொழுப்பு மிக்க அமிலங்களாக மாற்றும் போது, பால் உற்பத்தி அதிகரிக்கும். இதுதவிர, 4 கிலோ யூரியாவை, 65 லிட்டர் நீரில் கலந்து வைக்கோல் மீது தெளிக்கலாம்.
குறிப்பாக, ஒரு தார்ப்பாய் மீது, 5 கிலோ வைக்கோலை பரப்பி, தெளிப்பான் உதவியுடன் யூரியா கரைசலை தெளிக்கணும். இதேபோல, 100 கிலோ வைக்கோல் மீது, யூரியா கரைசலை தெளிக்க வேண்டும். அதன் மீது தார்ப்பாய் போட்டு மூடிவிட வேண்டும். இது, 21 நாட்களுக்கு பின் தீவனமாக கொடுக்கும் போது, மாடுகளின் செரிமானத்தை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி, 97907 53594.