sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சிறு மற்றும் குறு தானியங்களின் பயன்கள்

/

சிறு மற்றும் குறு தானியங்களின் பயன்கள்

சிறு மற்றும் குறு தானியங்களின் பயன்கள்

சிறு மற்றும் குறு தானியங்களின் பயன்கள்


PUBLISHED ON : நவ 07, 2012

Google News

PUBLISHED ON : நவ 07, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள்

1. சிறு மற்றும் குறு தானியங்கள்: கம்பு

அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்

02. சிறு மற்றும் குறு தானியங்கள்: சோளம்

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து

மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

03. சிறு மற்றும் குறு தானியங்கள்: கேழ்வரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து முதலியன உள்ளன.

மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

04. சிறு மற்றும் குறு தானியங்கள்: சாமை

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன.

மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.

05. சிறு மற்றும் குறு தானியங்கள்: திணை

அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் 'பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

06. சிறு மற்றும் குறு தானியங்கள்: வரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

07. சிறு மற்றும் குறு தானியங்கள்: பனிவரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து

மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவினை குறைக்கிறது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முறுக்கு, சீடை, அதிரசம் முதலியன தயாரிக்க உதவுகிறது.

08. சிறு மற்றும் குறு தானியங்கள்: குதிரைவாலி

அடங்கியுள்ள சத்துக்கள்: நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.

சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.

சிறு மற்றும் குறு தானியங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நாம் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.

திருமதி ப.கோமதி, துறை வல்லுனர் (மனையியல்), மற்றும் த.ஜெயபிரகாஷ், தொழில்நுட்ப உதவியாளர்,

ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையம், விவேகானந்தபுரம்-641 113, காரமடை, கோயம்புத்தூர்.






      Dinamalar
      Follow us