sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கொள்ளை லாபம் தரும் கொடி தக்காளி

/

கொள்ளை லாபம் தரும் கொடி தக்காளி

கொள்ளை லாபம் தரும் கொடி தக்காளி

கொள்ளை லாபம் தரும் கொடி தக்காளி


PUBLISHED ON : ஜூலை 06, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. நம்மூர் சமையலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள தக்காளி, இத்தாலி நாட்டு 'பீட்சா' உணவிலும் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் தக்காளிக்கு எப்போதும் மவுசு உண்டு. இதை பயிரிடும் விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் விலை

வீழ்ச்சியால் கவலைப்பட்டாலும், திடீரென 'ஜாக்பாட்' பரிசும் கிடைத்துவிடும். ''கொடித்தக்காளி பயிரிட்டு பணத்தை அள்ளலாம்,'' என்கிறார் திண்டுக்கல் விவசாயி செல்வராஜ்.

தக்காளியைப் பொறுத்தவரை இங்கு நாட்டு தக்காளி ஒட்டன்சத்திரம், அய்யலூர், வடமதுரை, சாணார்பட்டி, ஏ.வெள்ளோடு உட்பட பல இடங்களில் பயிரிடப்படுகிறது.

இது தரையில் படர்ந்து வளரக்கூடியது. சிறிது மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகி விடும். இதனால் மழை, வெயில் நேரத்தில் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், புதிய முறையில் கொடி தக்காளியென பயிரிட்டு சாதனை படைக்கிறார் செல்வராஜ்.

அவர் கூறியதாவது: கொடித் தக்காளி தரையில் வளராது. மழைக்கும், வெயிலுக்கும் தாக்குப் பிடிக்கும். அதிக மகசூல் தரக்கூடியது. பூச்சித் தாக்குதல் குறைவு. தக்காளி விளைந்து பலன் தர மூன்று மாதமாகும். அதன்பின் ஆறு மாதத்திற்கு காய்ப்பு தரும். நாட்டுத் தக்காளி மூன்று மாதம் மட்டுமே காய்ப்பு தரும்.

மழை பெய்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இலைச்சுருட்டு புழு, செல் பூச்சிகள் தாக்குதல் இருக்கும். இதற்கு இயற்கையான பூச்சி கொல்லி மருந்து தெளித்தால் போதும். ஒரு ஏக்கருக்கு களை எடுப்பு, நடுதல் கூலி, பந்தல், கொடி கட்டுதல் ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் செலவாகும். அதேசமயம் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை வருமானம் பெறலாம்.

விலை கூடும் போது வருமானம் மூன்று மடங்காகவும் வாய்ப்புள்ளது. நஷ்டம் இல்லாமல் லாபத்தை சம்பாதிக்க கொடித் தக்காளியே சிறந்தது. மகசூலைப் பொறுத்து முன் கூட்டியே திருச்சி, தஞ்சாவூர் உட்பட வெளிமாவட்ட வியாபாரிகள் முன்பதிவு செய்வார்கள். கொடித் தக்காளிக்கு எப்போதும் நல்ல மார்க்கெட்டும் உள்ளது, என்றார். தொடர்புக்கு 80989 -90831.

- எஸ். அரியநாயகம், திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us