/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பருவ காலங்கள் அறிந்து பன்றி குட்டிகள் பராமரிப்பு
/
பருவ காலங்கள் அறிந்து பன்றி குட்டிகள் பராமரிப்பு
PUBLISHED ON : ஜன 17, 2024

பருவ காலங்கள் அறிந்து, பன்றி குட்டிகளை பராமரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
குளிர் காலங்களில், குளிரால் பன்றி குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளன. இதை தடுக்க, 200 வாட்ஸ் பல்பு பயன்படுத்தி, கொட்டகைக்குள் செயற்கை வெப்பம் அளிக்கலாம். மேலும், வெப்ப காற்று தரக்கூடிய, மின் விசிறிகளை பயன்படுத்த வேண்டும்.
பன்றி கொட்டகை சுற்றிலும், குளிர் காற்று உள்ளே செல்வதை தடுக்கும் வகையில், கோணி பை மற்றும் தார் பாய் கட்ட வேண்டும். இது, குளிர்ந்த காற்று பன்றிகளை சென்று நேரடியாக தாக்காது.
அதேபோல, கோடை காலங்களிலும், வெப்பத்தால், பன்றி குட்டிகள் இறக்க நேரிடும். பன்றி கொட்டகை கூரை மீது, அடிக்கடி தண்ணீரை தெளிக்கவும். கொட்டகை சுற்றிலும் நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். கொட்டகை சுற்றிலும் சணல் கோணி பை கட்டி விட்டு, அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இதுபோல, குளிர் மற்றும் கோடை காலங்களில் பராமரித்தால், பன்றி குட்டிகள் இறக்க வாய்ப்பு குறைவாக இருக்கும். இழப்பு இன்றி வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.