/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
குறையாத வருவாய்க்கு 'வியட்நாம்' சிவப்பு பலா
/
குறையாத வருவாய்க்கு 'வியட்நாம்' சிவப்பு பலா
PUBLISHED ON : பிப் 14, 2024

வியட்நாம் சிவப்பு நிற பலாப்பழ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், வியட்நாம் சிவப்பு நிற பலாப்பழ மரத்தையும் சாகுபடி செய்துள்ளோம்.
இந்த வியட்நாம் சிவப்பு நிற பலாப்பழ மரத்தை நிலத்திலும், மாடித் தோட்டத்திலும் வளர்க்கலாம். நிலங்களில் சாகுபடி செய்யும் போது, தண்ணீர் தேங்காதவாறு வடி கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பழ மரம் சேதம் இன்றி வளர சவுகரியமாக இருக்கும்.
இந்த பலாப்பழத்தை பொருத்தவரையில், ஆண்டு முழுதும் காய்த்துக் கொண்டே இருக்கும். பழங்களை அறுவடை செய்ய செய்ய பழங்கள் வந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
98419 86400.