/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நோய் எதிர்ப்பு சக்திக்கு கலியன் ரக சம்பா நெல்
/
நோய் எதிர்ப்பு சக்திக்கு கலியன் ரக சம்பா நெல்
PUBLISHED ON : மார் 06, 2024

கலியன் சம்பா நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல்லில், கலியன் சம்பா ரக நெல் தனியாகும். இது, தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 150 நாளில் விளைச்சல் தரக்கூடியது. சம்பா பருவ காலத்திற்கு ஏற்ற ரகமாகும்.
இந்த, நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லில், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக் கலியன் சம்பா ரக நெல், நாகை மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் ரக நெல் என்பதால், நம்மூர் களிமண் நிலத்திலும், அதிகமாக சாகுபடி செய்யலாம்.
இந்த ரக நெல்லை, அரிசியாக மாற்றி உணவுப் பொருளாக சாப்பிடும் போது, நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, கலியன் சம்பா அரிசியை கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் ஆறாத புண்ணும் ஆறும். மேலும், கறுப்பு கவுனி அரிசிக்கு அடுத்தபடியாகநோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைந்தது. ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் என்.மகாலட்சுமி,
98414 42193.