/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வளமான வருவாய்க்கு நந்தனம் வான்கோழி - 2
/
வளமான வருவாய்க்கு நந்தனம் வான்கோழி - 2
PUBLISHED ON : மார் 20, 2024

நந்தனம் வான்கோழி - 2 வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
நந்தனம் வான்கோழி - 2 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உருவாக்கப்பட்ட வான்கோழி ரகமாகும். இந்த வான்கோழி ரகம் உடல் முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
நான்கு வாரத்தில் இருந்து, வான் கோழி குஞ்சுகளை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, நான்காவது வாரத்தில் குடற்புழு நீக்கம் மருந்தை, வான்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், ரத்த கழிச்சல் மருந்தை நீரில் கலந்து கொடுக்கலாம். ஆறாவது வாரத்தில், அம்மை தடுப்பூசியும், காலரா தடுப்பூசி போட வேண்டும். இதுபோல செய்து வந்தால், வான்கோழி குஞ்சுகள் இறப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். வான்கோழி வளர்ப்பில், கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,
97907 53594.