/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக மகசூலுக்கு வேங்கேரி ரக கத்திரிக்காய்
/
அதிக மகசூலுக்கு வேங்கேரி ரக கத்திரிக்காய்
PUBLISHED ON : ஏப் 24, 2024

வேங்கேரி ரக கத்திரிக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் நிலத்தில், காய்கறி ஆகிய தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ளேன். இதில், வேங்கேரி ரக கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
நான்கு அடி உயரம் வரையில் வளரும். இது, 45வது நாளில் பூ பூத்து, 60 நாளில் காய்கள் காய்க்க துவங்கும். நீர் பாசனம் மற்றும் இயற்கை உரம் நிர்வாகம் முறையாக கையான்டால், ஆறு மாதங்கள் வரையில் கத்திரிக்காய் அறுவடை செய்யலாம்.
இந்த ரக கத்திரிக்காய்களுக்கு பூச்சி தாக்குதல் அறவே இல்லை. அதிக மகசூலும் மற்றும் இனிப்பு சுவையுடன் காய்கள் இருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி. குகன்,
94444 74428.