/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இரு வித வருவாய்க்கு கோழி இனங்கள் வளர்ப்பு
/
இரு வித வருவாய்க்கு கோழி இனங்கள் வளர்ப்பு
PUBLISHED ON : மே 01, 2024

கோழி இனங்கள் வளர்ப்பில், இரு விதங்களில், வருவாய் பெருக்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
கிராமப்புற மக்களின் உணவு பழக்கத்தில், பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்கோழி கறி மற்றும் அதன் முட்டைகளை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது.
இதனால், ஜப்பானிய காடை, வாத்து, கினிக்கோழி முட்டைகள் மற்றும் அவைகளின் இறைச்சி, வான்கோழி இறைச்சி ஆகியவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது.
இதனால், சிறு பண்ணையாளர்கள், ஆண்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பல வித கோழி இனங்களை வளர்க்கலாம். இதனால், பல வித கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் வாயிலாக இரு விதங்களில் வருவாய் பெருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,
97907 53594.