PUBLISHED ON : மே 08, 2024

அ நிறம் | அளவு
ஐவேரி ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், ஐவேரி ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளோம்.
இது, தாய்லாந்து ரகத்தைச் சேர்ந்த மாம்பழமாகும். இளஞ்சிவப்பு, பர்பிள், மஞ்சள், கருப்பு என, பல நிறங்களில் காய்க்கும்.
விளைநிலம் மற்றும் மாடி தோட்டத்திலும், சாகுபடி செய்யலாம். கோடை காலத்தில் இந்த பழங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.
