/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நல்ல மகசூலுக்கு இளஞ்சிவப்பு நிற மாதுளை
/
நல்ல மகசூலுக்கு இளஞ்சிவப்பு நிற மாதுளை
PUBLISHED ON : மே 22, 2024

இளஞ்சிவப்பு நிற மாதுளை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெ.தமிழ்மணி கூறியதாவது:
தென்னை, மா, சப்போட்டா ஆகிய பழ மரங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், இளஞ்சிவப்பு நிற மாதுளை சாகுபடி செய்து வருகிறேன்.
இளஞ்சிவப்பு நிற மாதுளை நன்றாக வளர்கிறது. ஒவ்வொரு பழ மரத்திற்கும், 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் மாதுளை கொத்து கொத்தாக காய்க்க துவங்கும்.
குறிப்பாக, மாதுளை சாகுபடியை பொருத்தவரையில், பிஞ்சு உதிரல் மற்றும் வெள்ளை ஈ தடுப்பு முறைகளை, முறையாக கையாண்டால் போதும். மாதுளை சாகுபடியில், நல்ல மகசூல் மற்றும் அதிக வருவாய் ஈட்டலாம். புதிய ரக பழங்களுக்கு சந்தையில் எப்போதும் வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஜெ. தமிழ்மணி
96883 34640