/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக இனிப்பு சுவை 'ஹவிராக்' ரக பலா சந்தையில் எப்போதும் மவுசு
/
அதிக இனிப்பு சுவை 'ஹவிராக்' ரக பலா சந்தையில் எப்போதும் மவுசு
அதிக இனிப்பு சுவை 'ஹவிராக்' ரக பலா சந்தையில் எப்போதும் மவுசு
அதிக இனிப்பு சுவை 'ஹவிராக்' ரக பலா சந்தையில் எப்போதும் மவுசு
PUBLISHED ON : ஜூன் 12, 2024

ஹவி ராக் ரக பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வேளாண் பட்டயம் படித்து, செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், ஹவிராக் பலா சாகுபடி செய்யலாம்.
ஒட்டுச்செடிகள் வாயிலாக சாகுபடி செய்யும் போது, மூன்று ஆண்டுகளில் மகசூல் கொடுக்க துவங்கும். ஒவ்வொரு மரத்திற்கும், 15 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
குறிப்பாக, பலா தோட்டத்தை பொறுத்தவரையில், மரச்செடிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதற்கு ஏற்ப வடி கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிற ரக பலாப்பழங்கைளை காட்டிலும், அதிக சுவையுடன் இருப்பதால், ஹவிராக் பலாப்பழத்திற்கு சந்தையில் எப்போதும் கூடுதல் மவுசு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400