/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக குஞ்சுகள் பெறும் வழிகள்
/
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக குஞ்சுகள் பெறும் வழிகள்
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக குஞ்சுகள் பெறும் வழிகள்
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக குஞ்சுகள் பெறும் வழிகள்
PUBLISHED ON : ஜன 02, 2019

செயற்கை முறையில் கருத்தரித்தல் நாட்டுக்கோழி மற்றும் வான்கோழி இனங்களில் இனப்பெருக்கத்தை மேம்படுத்த ஒரு சிறந்த முறையாகும்.
இம்முறையில் சேவல் விந்தணுவை நீண்ட காலம் சேமிப்பதற்கான வழி இல்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் படி விந்தணுவை நீர்த்துப்போக பயன்படுத்தும் கலவைகளை 1:2 சதவீதம் கலந்து உடனடியாக உபயோகிக்க வேண்டும்.
சேவல் தன் 16வது வார முதல் விந்தணு உற்பத்தி செய்யும். ஆனால், அவற்றிக்கு கருவூட்ட திறன் குறைவாகவே இருக்கும். எனவே, 22 அல்லது
24 வாரமான சேவலின் விந்தணுவே செயற்கை கருத்தரிப்பு முறைக்கு சிறந்தது. விந்தணுவின் நிறம் வெள்ளை அல்லது முத்து போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும்.
கருவூட்டல் முறை
செயற்கை கருத்தரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் சுத்தமாகவும், உலர்வாகவும் இருக்க வேண்டும். பெரும்பான்மையான கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிந்தவுடன் செயற்கை கருத்தரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். கரு முட்டை குழாயில் உள்ள முட்டை விந்து நுழைவதை தடுத்து கருவுறுதலை குறைகின்றது.
கோழிகளுக்கு மாலை 3:00 மணி, வான் கோழிகளுக்கு மாலை 5:00 மணிக்கு மேல் கருவூட்டல் சிறந்தது. முட்டையிடாத கோழிகளுக்கு கருவூட்டுதல் மிக கடினம். கோழிப் பண்ணையில் கோழிகள் 25 சதவீதம் முட்டை உற்பத்தியை அடையும் பொழுது கருவூட்டல் செய்யப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறையை நாட்டுக் கோழியில் பயன்படுத்துவதால் குஞ்சு பொரிப்புத்
திறன் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கிறது.
- த.கீதா, ப.டென்சிங்ஞானராஜ், ச.மனோகரன்.
காங்கயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,
சத்தியமங்கலம்.

