/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கறையான் அரிப்பை கட்டுப்படுத்த வெள்ளை சுண்ணாம்பு பூச்சு
/
கறையான் அரிப்பை கட்டுப்படுத்த வெள்ளை சுண்ணாம்பு பூச்சு
கறையான் அரிப்பை கட்டுப்படுத்த வெள்ளை சுண்ணாம்பு பூச்சு
கறையான் அரிப்பை கட்டுப்படுத்த வெள்ளை சுண்ணாம்பு பூச்சு
PUBLISHED ON : ஆக 13, 2025

கறையான் அரிப்பை தடுக்கும் விதம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வே.பரசுராமன் கூறியதாவது:
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு மண் கொட்டி, 30 சென்ட் விவசாய நிலத்தை உயரப்படுத்தியுள்ளேன். இந்த நிலத்தில், காய்கறி செடிகள் மற்றும் மா, தென்னை, கொய்யா, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன். மரங்கள் நன்றாக வளர்ந்து, மகசூல் கொடுக்க துவங்கியுள்ளன.
இதுபோன்ற நேரங்களில், பூச்சிகள், வண்டுகள், கறையான் உள்ளிட்டவை, செடிகளை தாக்கும் அபாயம் உள்ளது.
இதை தவிர்க்க, மரங்களுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடித்து பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளேன். இந்த தொழில்நுட்பத்தால், செடிகளில் கறையான் அரிப்பு, சிலந்தி, வெள்ளை பூச்சி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும், காய், கனிகள் மகசூல் கொடுக்கும் போது, எவ்வித இழப்பும் இன்றி அறுவடைக்கு ஏற்றதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: வே.பரசுராமன், 99521 23682.

