UPDATED : ஜூலை 26, 2024 07:49 PM
ADDED : ஜூலை 26, 2024 07:19 PM

பெங்களூரு: விருந்தினர் விடுதியில் தனியார் நிறுவன பெண் ஊழியர், கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரை அலற வைத்துள்ளது.
பீஹாரைச் சேர்ந்தவர் கீர்த்தி குமாரி,24 இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெங்களூரு ஜெயநகரில் உள்ள கோரமங்கலாவில் விஜி லேவுட் என்ற விடுதியில் கட்டணம் செலுத்தி விருந்தினராக தங்கியுள்ளார்.
சம்பவத்தன்று விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கிருத்தி குமாரியை தாக்கி அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி யார் என தேடி வருகின்றனர். பெண் கொலையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கொலையாளியின் பெயர் அபிஷேக் எனவும் தன்னுடைய காதலி பிரிந்து செல்வதற்கு கிருத்தி குமாரி தான் காரணம் என நினைத்து அவரை கொலை செய்து உ்ளளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.