ADDED : செப் 27, 2026 11:16 PM

பெங்களூரு: கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு தலைவராக டி.சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர், கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக வணிக துறையில் அனுபவம் பெற்றுள்ளார்.
1962 முதல் சந்தையில் இயங்கி வரும் இவரது குடும்ப வணிகமான சி.வி.திம்மையா அண்டு கம்பெனியை சிறப்பாக நடத்தி வருகிறார். இதன் மூலம் வர்த்தகர்கள், தொழில் துறை எதிர்கொள்ளும் சவால்களை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.
இது தவிர கூட்டமைப்பு துணைத் தலைவராகவும், மூத்த துணைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
அத்துடன் ஏ.பி.எம்.சி., குழு இயக்குநராகவும், பெங்களூரு தானிய வர்த்தகர்கள் சங்க செயலராகவும் பணியாற்றி, சந்தை உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார்.
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சசிதர், பி.இ., பட்டதாரி. இவர், இயந்திர பாகங்கள் தயாரிக்கும் கார்த்திக் இண்டஸ்டிரீஸ் நிறுவன உரிமையாளராவார். கடந்த 10 ஆண்டுகளாக, எப்.கே.சி.சி.ஐ.,யில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேலும், தொழில், தொழிலாளர், ஏற்றுமதி மற்றும் வணிக சிறப்பு விருதுகள் உட்பட பல்வேறு முக்கிய குழுக்களின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மற்றொரு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சதீஷ், நிறுவனத்தின் புதிய இயக்குநர் குழு முழுமை அடைந்து உள்ளது.
அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் கொண்ட புதிய பொறுப்பாளர்களின் நியமனம், மாநிலத்தின் வர்த்தக தொழில் துறைக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.
