sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

உதயகிரி சம்பவம் எதிரொலி பா.ஜ., இன்று மைசூரில் போராட்டம்

/

உதயகிரி சம்பவம் எதிரொலி பா.ஜ., இன்று மைசூரில் போராட்டம்

உதயகிரி சம்பவம் எதிரொலி பா.ஜ., இன்று மைசூரில் போராட்டம்

உதயகிரி சம்பவம் எதிரொலி பா.ஜ., இன்று மைசூரில் போராட்டம்


ADDED : பிப் 23, 2025 11:15 PM

Google News

ADDED : பிப் 23, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''மைசூரு உதயகிரி சம்பவத்தை கண்டித்து, இன்று மைசூரு போராட்டம் நடத்தப்படும்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பார்க்க, ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி வீட்டுக்கு, நேற்று மாநில தலைவர் விஜயேந்திரா வந்திருந்தார்.

நிகழ்ச்சியை பார்த்த பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:

உதயகிரி சம்பவத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதில் மாநில அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.

இவ்விஷயத்தில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுகிறது. இதை கண்டித்து, இன்று மைசூரில் போராட்டம் நடத்தப்படும்.

பல இடங்களில் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்கின்றன. பெங்களூரு நகரம் பாதுகாப்பானதாக இல்லை.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், 'ராஜினாமா' செய்வதாக தெரிவித்துள்ளார். எவ்வளவு வலி இருந்தால் அவ்வாறு கூறியிருப்பார். சட்டம் - ஒழுங்கை காப்பாற்றவே, மக்கள் உங்களை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்தனர்.

அதை விடுத்து, இவ்வாறு நீங்கள் பேசுவது, துரோகிகளுக்கும், கொலையாளிகளுக்கும் தைரியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

144 தடை உத்தரவு


உதயகிரியில் நடந்த சம்பவத்தில் மாநில அரசின் தோல்வியை கண்டித்து, ஜே.எஸ்.எஸ்., மஹாவித்யா பீடத்தில் இருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் பங்கேற்பதாக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்திருந்தார்.

இதுபோன்று, காந்தி நகர் தலித் மஹா சபையும், மாவட்ட இளைஞர் காங்கிரசும் இணைந்து மைசூரு கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில் முன்பிருந்து அமைதி ஊர்வலம் புறப்படுகிறது.

இன்று நடக்கும் இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும், அனுமதி அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையங்களில் அவர்கள் அனுமதி கேட்டிருந்தனர்.

இவ்விரண்டுக்கும் அனுமதி மறுத்துள்ள நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ''இரு கட்சிகளும் நடத்தும் போராட்டம், ஊர்வலம் நடக்கும் பகுதி, போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. பல மதங்களை சேர்ந்தவர்கள், சுற்றுலா பயணியர் கூடுவர். வெளி மாவட்ட பிரமுகர்களும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

''எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பலாம். பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், பிப்., 23 முதல் பிப்., 24ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி வீட்டில் அமர்ந்தபடி, பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சியினர் பார்த்தனர்.






      Dinamalar
      Follow us